போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், புனே நகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதியில் இருந்து 17 லட்சம் மதிப்பிலான மெபிட்ரான் (Mephedrone) என்ற போதை மருந்தை புனே போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர். மியாவ் மியாவ் ( மெபிட்ரான்) என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த போதைப் பொருள் மிகுந்த சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.    


மியாவ் மியாவ் ( மெபிட்ரான்) என்றால் என்ன? 


பெரும்பாலும் மியாவ் மியாவ் அல்லது ஒயிட் மேஜிக் என்று அறியப்படும் இதன் அறிவியல் பெயர் மெபெட்ரோன் ஆகும். இது அம்பேட்டமைன், கேத்தினோன் போன்ற  அல்கலாய்டு வேதிப்பொருட்களின் செயற்கை  தூண்டுதலாகும். இது, எம்டிஎம்ஏ போதை மாத்திரைகள் மற்றும் கொகைனுடன் (Cocaine)  ஒப்பிடக்கூடிய விளைவுகளைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.


பெரும்பாலும், கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படும் போதைப்பொருளான இது உடல் நலத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடியதாக உள்ளது. தொடர்ச்சியாகப் பயன்படுத்தினால் மாரடைப்பு, நினைவு இழத்தல், இயல்புக்கு மாறான கற்பனை தோற்றம், நினைவு இழத்தல், வலிப்பு போன்றவை ஏற்படலாம். 


கொகைன் போன்ற மற்ற இதர போதைப் பொருட்களுடன் ஒப்பிடுகையில் மலிவான விலையைக் கொண்டிருப்பதாலும், ஆன்லைனில் எளிதாக இதனைப் பெற முடியும் என்பதாலும் இதன் பயன்பாடு அதிகரித்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உதாரணமாக, தற்போது மும்பையில் உலவி வரும்  போதைப் பொருட்களில் 80% மெபிட்ரான் -ஆக இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது.     


தேசிய போதைப்பொருள் தடுப்பு சட்டம், 1985-ன் கீழ்,  மெபிட்ரான் போதைப் பொருள் முதல் அட்டவணையில் இடம்பெற்றுள்ளது. தடை செய்யப்பட்ட இந்த போதைப் பொருளை தயார் செய்தாலோ, கைவசம் வைத்திருந்தாலோ கடுங்காவல் தண்டனை அளிக்கப்படும். தற்போது,புனேவில் கைப்பற்றப்பட்ட பொருளின் மதிப்பு ரூ 17 லட்சமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக புனே போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


விழிப்புணர்வு


போதைப் பழக்கம் மிகவும் மோசமான சுகாதாரப் பிரச்சினைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அது எச்.ஐ.வி. கல்லீரல் அழற்சி, காசநோய் போன்ற கடுமையான நோய்களை உண்டாக்குவதோடு, பொருளாதார இழப்பு மற்றும் ஒட்டு மொத்த சமுதாயத்தின் வீழ்ச்சி போன்ற பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும்.    


Untold Story 3: இது பஞ்சாபின் சார்பட்டா கதை..! முகமது அலியை எதிர்த்த ஒரே இந்தியர்.! இது கவுர்சிங் வரலாறு!