தமிழ்நாடு :
- தமிழ்நாட்டிலும் ஜனவரி 3-ந் தேதி முதல் சிறுவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம் – சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
- தமிழ்நாட்டில் 33.20 லட்சம் சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி தயார் நிலையில் உள்ளது
- தமிழ்நாட்டில் சிறுவர்களுக்கு பள்ளிகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
- ஒமிக்ரான் வைரஸ் பரவலைத் தடுக்க மக்கள் கூட்டமாக கூடுவதைத் தவிர்க்க வேண்டும் – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
- வேலூர் மாவட்டம் பேரணாம்பேட்டில் தொடர்ந்து நில நடுக்கம் – பொதுமக்கள் வீடுகளுக்குள் செல்லவே அச்சம்
- சுனாமி 17ம் ஆண்டு நினைவு அஞ்சலி – தமிழகம் முழுவதும் மக்கள் அஞ்சலி
இந்தியா :
- கேரளாவில் விடிய, விடிய கலவரத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் - கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் கலவரத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது
- பீகாரில் நூடுல்ஸ் ஆலையின் கொதிகலன் வெடித்து 6 பேர் பரிதாபமாக உயிரிழப்பு - 12 பேர் படுகாயம்
- ஒமிக்ரான் தொற்று காரணமாக கர்நாடகாவில் நாளை மறுநாள் முதல் 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு
- ஒமிக்ரான் பரவலைத் தடுக்கும் விதமாக மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை
- பிரபல நடிகர் சல்மான்கானை பாம்பு கடித்தது – விஷமற்ற பாம்பு என்பதால் ஆபத்தின்றி பிழைத்தார்
உலகம் :
- நிறவெறிக்கு எதிராக போராடிய தென்னாப்பிரிக்க பேராயர் டெஸ்மண்ட் டுட்டு காலமானார் – உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல்
- இங்கிலாந்து ராணியின் அரண்மனையில் ஆயுதங்களுடன் ஊடுருவிய நபர் கைது – கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பரபரப்பு
- காங்கோ நாட்டில் மதுபான விடுதியில் தற்கொலைப்படைத் தாக்குதல் – 6 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்
- மியான்மர் நாட்டில் 30 பேர் எரித்துக் கொலை – உலக நாட்டு தலைவர்கள் கண்டனம்
- ஆப்கானிஸ்தானில் ஆண்கள் துணையின்றி பெண்கள் வெளியே வரக்கூடாது – தலிபான்கள் புதிய உத்தரவு
விளையாட்டு :
- தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய வீரர்கள் முதல் இன்னிங்சில் நிதான ஆட்டம்
- செஞ்சூரியன் டெஸ்டில் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் சதமடித்து அசத்தல்
- செஞ்சூரியன் டெஸ்டில் மயங்க் அகர்வால் அரைசதம் : புஜாரா டக் அவுட்
- விஜய் ஹசாரோ தொடரின் இறுதிப்போட்டியில் இமாச்சல பிரதேசத்திடம் போராடி தோற்றது தமிழ்நாடு
மேலும் படிக்க : Tsunami 17 Years | மக்களை காவு வாங்கிய கடல்... சுனாமி ஏற்பட்டு 17 வருடங்கள்... நினைவுகூர வேண்டியது என்ன?
மேலும் படிக்க : Untold Story 3: இது பஞ்சாபின் சார்பட்டா கதை..! முகமது அலியை எதிர்த்த ஒரே இந்தியர்.! இது கவுர்சிங் வரலாறு!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்