தமிழ்நாடு:



  • தன்மீது வாரிசு என்ற குற்றச்சாட்டு வந்தபோது அதை பாராட்டியவர் அன்பழகன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • 13 ஆண்டுகால வருமான வரி கணக்கை பொதுவெளியில் வெளியிடத் தயார் – தி.மு.க.வினர் வெளியிடத் தயாரா? அண்ணாமலை சவால்

  • அரசுப்பள்ளிகளை முன்னாள் மாணவர்கள் மேம்படுத்தும் நம்ம ஸ்கூல் திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

  • கோவை அன்னூர் விவசாயிகளுடன் எம்.பி. ஆ.ராசா பேச்சுவார்த்தை

  • திருவேற்காட்டில் மீன்பிடிக்கும் விவகாரத்தில் இரு தரப்பு மீனவர்களிடையே மோதல்

  • சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் அதிவேகமாக சென்ற கார் விபத்தில் சிக்கியதில் ஐ.டி.பெண் ஊழியர் உயிரிழப்பு


இந்தியா:



  • உலகக்கோப்பை கால்பந்தை கைப்பற்றிய அர்ஜெண்டினா அணிக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து

  • உலகக்கோப்பை கால்பந்தை அர்ஜெண்டினா வென்றதால் இந்தியா முழுவதும் ரசிகர்கள் கொண்டாட்டம்

  • வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த அனைத்திற்கும் ரெட்கார்டு – பிரதமர் மோடி

  • வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் – மத்திய நிர்மலா சீதாராமன்

  • இந்தியாவிற்குள் உளவு பார்க்க முயன்ற பாகிஸ்தான் ட்ரோனை இந்திய பாதுகாப்பு வீரர்கள் சுட்டு விரட்டினர்


உலகம் :



  • உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்ததால் பிரான்ஸ் நாட்டில் வன்முறை

  • இந்தோனிஷியாவிற்கு தப்பிச்செல்ல முயன்று நடுக்கடலில் பழுதான படகு – மியான்மரைச் சேர்ந்த 104 பேர் மீட்பு

  • ஆப்கானிஸ்தானில் சுரங்கப்பாதையில் எரிபொருள் டாங்கர் வெடித்து விபத்து – 19 பேர் உயிரிழப்பு


விளையாட்டு:



  • உலகக்கோப்பையை கைப்பற்றியது அர்ஜெண்டினா – உலகம் முழுவதும் ரசிகர்கள் கொண்டாட்டம்

  • 36 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையை வென்ற அர்ஜெண்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை எனத் தெரிவித்துள்ளார். 

  • அர்ஜெண்டினா அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த நாட்டு மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

  • உலகக்கோப்பையை வென்ற அர்ஜெண்டினா கேப்டன் மெஸ்ஸிக்கு தொடர் நாயகன் விருது

  • உலகக்கோப்பையின் உயரிய விருதான கோல்டன் பூட்ஸ் விருதை எம்பாப்பே வென்றார்