PM Modi Diwali Wish : 'பிரகாசமான தீபாவளியை கொண்டாடுங்கள்..' மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி..!

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் என பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

நாடுமுழுவதும் தீபாவளி பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகாலையில் எழுந்து நீராடி புதிய உடைகளை அணிந்து, பட்டாசுகளை வெடித்து தங்களது மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். 

Continues below advertisement

இந்தநிலையில், அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் என பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளி ஒளிமயம் மற்றும் பிரகாசத்துடன் தொடர்புடையது. இந்த மங்கலப் பண்டிகை நம் வாழ்வில் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தட்டும். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நீங்கள் ஒரு அற்புதமான தீபாவளியை கொண்டாடுவீர்கள் என்று நம்புகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார். தற்போது, பிரதமர் மோடியின் வாழ்த்து பதிவை பலரும் ரீ- ட்வீட் செய்து வாழ்த்தை பரிமாறி கொண்டு வருகின்றனர். 

தலைவர்கள் வாழ்த்து : 

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு  - நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! ஒளி மற்றும் மகிழ்ச்சியின் புனித திருநாளில், அறிவு மற்றும் ஆற்றலின் விளக்கை ஏற்றி, தேவைப்படுபவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொண்டுவர முயற்சிப்போம். இந்த மகத்தான திருநாளில், நாட்டு மக்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும் செழிப்பும் நிலவ பிரார்த்திக்கிறேன்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா - நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
இந்த தீபத்திருநாள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும், வளத்தையும் கொண்டு வரட்டும்.

பிரபலங்களின் வாழ்த்து :

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் - உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர்

நாட்டு மக்களுக்கு பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலமாக தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். ங

 

Continues below advertisement
Sponsored Links by Taboola