Madhya Pradesh Firecrackers Ban:  மத்திய பிரதேச மாநிலத்தின் குவாலியர்,சிங்க்ரவுலி, காட்னி ஆகிய பகுதிகளில் நிலவும் காற்று மாசுபாடு காரணமாக பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் நாளை தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. பண்டிகை காலம் என்பதால் மக்கள் புத்தாடைகளையும், பட்டாசுகளையும்  வாங்கி தயாராகி வருகின்றனர். நாட்டில் பல பகுதிகளில் காற்று மாசுபாடு மோசமான நிலையில் உள்ளதால் பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.  டெல்லியில் நிலவும் மிகவும் மோசமான  காற்று மாசுபாடு காரணமாக இந்தாண்டு, தீபாவளி பண்டிகையன்று  தீபாவளி பண்டிகையை தினத்தில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டள்ளது. அதையும் மீறி பட்டாசு வெடித்தால் ஆறு மாத சிறைத்தண்டனை மற்றும் ரூபாய் 200 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பட்டாசுகள் வெடித்து கொண்டாடினால் காற்று மாசு கடுமையாக அதிகரிக்கும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய பிரதேச மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மாநில உள்துறை அமைச்சகம் சார்பில் மாநிலத்தின் மூன்று பகுதிகளில் பட்டாசு வெடிக்க நேரக் கட்டுபாடு அறிவிக்கப்பட்டுள்ளது. 


குவாலியர் (Gwalior), சிங்க்ரவுலி (Singrauli) கட்னி( Katni) ஆகிய பகுதிகளில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் பசுமை பட்டாசுகள் மட்டுமே வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக உத்தரவிட்டுள்ளது. மேலும், பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.  இரவு 8 மணி முதல் 10 வரை இரண்டு மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பசுமை பட்டாசுகள் மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


சிங்க்ரவுலி (Singrauli)  மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள உத்தவில், சிங்க்ரவுலி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி பகுதிகளிலும் அக்டோபர் 22-ஆம் தேதி முதல் நவம்பர் 5-ஆம் தேதி வரை பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


பட்டாசு வெடிப்பது தொடர்பாக மாநில உள்துரை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிக்காட்டு நடைமுறைகளில், மாநிலத்தில் பசுமை பட்டாசுகள் மட்டுமே வெடிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாநிலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு குறைவாக உள்ள (Air Quality Index (AQI)) உள்ள பகுதிகளில் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் எந்தெந்த பகுதிகளில் காற்று மாசுபாடு குறைவாக உள்ளதோ அப்பகுதிகளில் மட்டும் குறிப்பிட்ட நேரங்களில் பசுமையான பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசுபாடு அதிகமாக உள்ள பகுதிகளில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


காற்று மாசுபாடு மிதமான அளவுக்கு இருக்கும் இடங்களான போபால், இந்தோர், ஜபால்பூர், நீமச், தர், தமோ, சாகர், உஜ்ஜயின், ரட்லம், ஷேஹோர், ரெய்சன், ஹர்டா, விடிஷா, மண்ட்சூர், உள்ளிட்ட பகுதிகளில் பசுமை பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 


மாநில மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி எஸ்.டி. வால்மீகி கூறுகையில், இந்தாண்டு பசுமை பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு இந்த அளவுக்குக் கூட நிலைமை இருக்குமா என்று தெரியவில்லை. அடுத்த ஆண்டு பசுமை பட்டாசுகள் வெடிக்கவும் அனுமதி வழங்கப்படுவது சந்தேகம்தான் என்று தெரிவித்துள்ளார்.