இந்தியாவின் கடற்படைக்கு மேலும் வலிமையை சேர்க்கும் வகையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ப்ராஜெக்ட் 17 ஆல்பா போர்க்கப்பலின் ஆறாவது கப்பலை – புதிய ‘விந்தியகிரி’யை நாட்டுக்கு இன்று  அர்ப்பணிக்கிறார்.






கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் லிமிடெட்டில் புதிய விந்தியகிரியை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்க உள்ளார். புதிய விந்தியகிரி - கடற்படைத் திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டு வரும் ஒரு போர்க்கப்பல். இதில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு(Stealth) அம்சங்கள், ஆயுதங்கள், சென்சார்கள் மற்றும் இயங்குதள மேலாண்மை அமைப்புகளுடன் கட்டப்பட்ட ப்ராஜெக்ட் 17 பிரிவு போர்க்கப்பல். அதாவது, ஷிவாலிக் கிளாஸில் ஒரு பகுதியாகும்.


விந்தியகிரி கப்பல் கர்நாடகாவில் உள்ள மலைத்தொடரின் பெயரால் அழைக்கப்படுகிறது. ஏற்கனவே ஐஎன்எஸ் நீலகிரி, உதயகிரி, ஹிம்கிரி, தாராகிரி மற்றும் துனகிரி ஆகிய கப்பல்களும் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் இருக்கும் மலைகளை குறிக்கும் வகையில் பெயரிடப்பட்டுள்ளது. இது தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்ட போர்க்கப்பல் ஆகும். இது அதன் முன்னோடியான ஐஎன்எஸ் விந்தியகிரியின் புகழ்பெற்ற சேவைக்கு மரியாதை செலுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.


பழைய விந்தியகிரி போர்க்கப்பல் ஜூலை 8, 1981 முதல் ஜூன் 11, 2012 வரை சுமார் 31 ஆண்டுகால சேவையில் பல்வேறு சவாலான செயல்பாடுகள் மற்றும் பன்னாட்டுப் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டது. புதிதாகப் பெயர் சூட்டப்பட்ட விந்தியகிரி, உள்நாட்டுப் பாதுகாப்புத் திறன்களின் எதிர்காலத்தை நோக்கி முன்னேறும் அதே வேளையில், அதன் வளமான கடற்படை பாரம்பரியத்தைத் தழுவுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டின் அடையாளமாக விளங்குகிறது என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


ப்ராஜெக்ட் 17A என்றால் என்ன?   


ப்ராஜெக்ட் 17A திட்டத்தின் கீழ், M/s MDL இன் நான்கு கப்பல்களும் M/s GRSE இன் மூன்று கப்பல்களும் கட்டுமானத்தில் உள்ளன. திட்டத்தின் முதல் ஐந்து கப்பல்கள் நாட்டிற்காக ஏற்கனவே அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. அனைத்து போர்க்கப்பல் வடிவமைப்பு நடவடிக்கைகளுக்கான முன்னோடி அமைப்பான இந்திய கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகத்தால் ப்ராஜெக்ட் 17A கப்பல்கள் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.    


Manipur Case: மணிப்பூர் விவகாரம், 53 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்த சிபிஐ.. நியாயம் கிடைக்குமா?


Supreme Court On Manipur: மணிப்பூர் கலவரம் - 3 ஓய்வுபெற்ற நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு