கர்ப்பிணி, மாற்றுத்திறனாளி மத்திய அரசு ஊழியர்கள் அலுவலகம் செல்வதற்கு விலக்கு அளிக்கபட்டுள்ளது.


உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு தீவிரமாக பரவி வரும் சூழலில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா மூன்றாவது அலை பரவத் தொடங்கியதை அடுத்து அந்தந்த மாநிலங்கள் மீண்டும் ஊரடங்கை அறிவித்துள்ளது.  இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, ஊரடங்கு அறிவிப்பில் கடைகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் 50 சதவீதம் வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐடி ஊழியர்கள் உள்ளிட்ட சிலர் வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. Covid Scare in Parliament: நாடாளுமன்ற பணியாளர்கள் 402 பேருக்கு கொரோனா உறுதி - டெல்லியில் அலர்ட்


இந்த நிலையில், கர்ப்பிணி, மாற்றுத்திறனாளி மத்திய அரசு ஊழியர்கள் அலுவலகம் செல்வதில் விலக்கு அளிக்கபட்டுள்ளதாகவும், ஜனவரி 31ஆம் தேதி வரை கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளி பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டும் என்றும் மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். மேலும் துணை செயலர் அந்தஸ்துக்கு கீழ் உள்ள ஊழியர்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே பணிக்கு வர வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக அலுவல் கூட்டங்களை காணொலி மூலம் மட்டுமே நடத்த வேண்டும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.


இதனிடையே, நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்ததால் தடுப்பூசி போடும் பணிகள், மருத்துவ கட்டமைப்புகளை தயார்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். Covid-19 Vaccine 3rd Dose| மூன்றாவது தடுப்பூசிக்கு CoWIN தளத்தில் பதிவு செய்யலாம் - மத்திய அரசின் அறிவிப்பு என்ன?


 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண