மகாராஷ்ட்ராவின் தலைநகர் மும்பை. இங்கு மக்கள் அடர்த்தி அதிகளவில் காணப்படும். இங்கு அமைந்திருப்பது விலே பார்லே. விலே பார்லே பகுதியில் உள்ள ஜூஹூ. இந்த பகுதியில் உள்ள இந்திரா நகர் அருகே மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மெட்ரோ பணிகள் நடைபெற்று வரும் பகுதிக்கு அருகில் உள்ள வீடுகளில் அதிர்வுகள் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவும், மெட்ரோ பணிகள் காரணமாகவும் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பு காரணமாக அருகில் உள்ள சன்யாஸ் ஆசிரமம் பள்ளிக்கு மாற்றப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், மக்கள் அகற்றப்பட்ட பகுதியில் இருந்த வீடுகளில் 7 வீடுகள் நேற்று நள்ளிரவு திடீரென இடிந்து விழுந்தது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. முன்னேற்பாடாக மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அகற்றப்பட்டதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், அருகில் இருந்த சில வீடுகளில் மட்டும் சேதாரம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த 7 வீடுகளில் வசித்து வந்த 24 பேர் தற்போது பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருப்பதால், அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க : தகாத உறவால் பிறந்த குழந்தை; இளம் பெண்ணுக்கு வீட்டில் பிரசவம்: தாய், சேய் உயிரிழந்த பரிதாபம்!
மேலும் படிக்க : Crime : பட்டியலின சிறுவனை, கால்களை நக்கவைத்து வீடியோவை பரப்பிய கொடூரம்.. தொடரும் சாதிய வன்முறை