கர்நாடகாவைச் சேர்ந்த தலித் நபர் ஒருவர் வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டு, சுன்னத் செய்து, அவரது விருப்பத்திற்கு மாறாக மாட்டிறைச்சி சாப்பிட வற்புறுத்தப்பட்டதாக ஒரு புகார் எழுந்துள்ளது. இது குறித்து மாண்டியா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 26 வயதான ஸ்ரீதர் கங்காதர் அளித்த புகாரின் அடிப்படையில், 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் போலீஸார் தெரிவித்தனர்.


மாண்டியாவைச் சேர்ந்த ஸ்ரீதர் கங்காதர் தனது புகாரில், தனது பெயரும் முகமது சல்மான் என்று மாற்றப்பட்டதாகக் கூறியுள்ளார். புகாரின்படி, மாண்டியாவின் மத்தூர் தாலுகாவில் உள்ள கொப்பாவைச் சேர்ந்த தனது நண்பர் ஒருவரான அத்தவர் ரஹ்மான் வழியாக மே மாதம் முதலே இது தொடர்பான சம்பவங்களின் நிகழத் தொடங்கியதாக கங்காதர் கூறினார்.




ரெஹ்மான் அவரை பெங்களூரில் உள்ள பனசங்கரி மசூதிக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது, அங்கு மற்றொரு குற்றம்சாட்டப்பட்டவரான அஜீஸ் சாப் அவருக்கு இஸ்லாத்தை கற்பிக்கத் தொடங்கியுள்ளார் என்று புகாரை மேற்கோள் காட்டி போலீசார் தெரிவித்தனர். பின்னர் பெங்களூருவில், பல மசூதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். பின்னர் அவருக்கு சுன்னத் செய்யப்பட்டு, மாட்டிறைச்சி உண்ணும்படி கட்டாயப்படுத்தப்பட்டார். சாப்பிட மறுத்ததால், அடித்து உதைத்துள்ளனர், என்றனர் போலீசார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவரை திருப்பதி மற்றும் அருகிலுள்ள பகுதியில் உள்ள மசூதிகளுக்கு அழைத்துச் சென்றனர், அங்கு அவர்கள் குரானைக் கற்கவும், இஸ்லாமிய வழியில் பிரார்த்தனை செய்யவும் கற்றுக் கொடுத்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் ஒருநாளில் குறைந்தபட்சம் மூன்று இந்துக்களையாவது மதமாற்றம் செய்ய இலக்கு வைத்திருந்ததாகவும் புகார் வழி கூறப்படுகிறது. மேலும் கைத்துப்பாக்கியை கொடுத்து புகைப்படம் எடுத்தனர். மூன்று இந்துக்களை மதமாற்றம் செய்யாவிட்டால், புகைப்படத்தை போலீசில் ஒப்படைத்து சதி செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.இதற்கு அடுத்து ஹூப்பள்ளிக்கு திரும்பிய கங்காதர் செப்டம்பர் 9ம் தேதி காவல்துறையில் புகார் அளித்தார். இதுகுறித்துப் பகிர்ந்துகொண்டுள்ள காவல்துறை விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், புகார்தாரரின் கூற்றுக்களை சரிபார்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்  மேலும் தெரிவித்தனர்.


 


முன்னதாக,


சந்தேக நபர்களைக் கண்காணிக்கவும் குற்றங்களைத் தடுக்கவும் பெங்களூரு போலீஸார் கைரேகை ஸ்கேனர் சாதனம் மற்றும் MCCTNS செயலியைப் பயன்படுத்துகின்றனர். சந்தேக நபர்களின் கைரேகைகள் MCCTNS செயலியின் அடிப்படையில், அவர்களின் குற்றப் பின்னணியை அறிந்து கொள்ள முடியும். . கர்நாடக தலைநகரில் இந்த முன்னோடி திட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்து காவல் நிலையங்களும் கைது செய்யப்பட்ட நபர்களின் கைரேகைகளை கைப்பற்றி சேமித்து வருகின்றது. 


கைரேகை போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி குற்றவாளிகளை பிடிக்க பெங்களூரு நகர போலீசார் முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, மாநிலத்தில் உள்ள காவல் நிலையங்களில் கைது செய்யப்பட்ட அனைவரின் கைரேகைகளையும் கைப்பற்றி சேமிக்க ஸ்கேனர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கைரேகைகள் மாநில காவல்துறைக்கு அனுப்பப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரவிருக்கிறது.  ஒரு நபரின் கைரேகையை MCCTNS செயலியில் ஸ்கேன் செய்தால், அதில், அவர் இதற்கு முன்னர் ஏதேனும் குற்றத்தில் ஈடுபட்டிருந்தால்,  உடனடியாக திரையில் குற்றத்தின் முழு விபரம் மற்றும் எவ்வளவு குற்றங்கள் என்பதுவரை தெரியவரும். இதற்காக மொபைல் கிரைம் மற்றும் கிரிமினல் டிராக்கிங் நெட்வொர்க் சிஸ்டம் ஆப் (MCCTNS) ஐ மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் உருவாக்கியுள்ளனர். 


மேலும் கர்நாடக காவல் துறையினருக்கு கைரேகை ஸ்கேனர் கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன. இதனால், போலீசார் சந்தேக நபரின் விரல்களை ஸ்கேன் செய்து, அவர்களின் விவரங்களை MCCTNS செயலி மூலம் சரிபார்க்கலாம். இதன் மூலம் காவல் துறை சந்தேகிக்கும் சந்தேக நபரின் அனைத்து குற்றப் பதிவுகளையும், கடந்த காலங்களில் கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களையும் அந்த கைரேகை ஸ்கேனர் திரையில் காண்பித்துவிடும். கைரேகை சரிபார்க்கப்பட்டதும், sசந்தேககிக்கப்படும் நபருக்கு குற்றப் பின்னணி இருந்தால், குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காவலில் வைக்கலாம். கர்நாடக காவல் துறை கொண்டுவந்துள்ள இந்த புதிய நடைமுறையின் கீழ், இரவு 11 மணிக்கு மேல் சந்தேகத்திற்கிடமான முறையில் சாலையில் செல்பவர்களின் கைரேகைகளை போலீசார் ஸ்கேன் செய்து வருகின்றனர்.


இதன் மூலம் பிடிபடும் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவார்கள். இதில் இருந்து எந்த குற்றவாளியும் தப்ப முடியாது என்கிறார் பெங்களூரு நகர கிழக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் சுப்பிரமணியேஸ்வர ராவ். இந்நிலையில், நாட்டில் அதிகரித்து வரும் குற்றங்களை தடுக்க மத்திய அரசு மாஸ்டர் பிளான் ஒன்றை தயாரித்துள்ளது. குற்றங்களை கட்டுப்படுத்தவும், குற்றவாளிகளை கைது செய்யவும் உதவும் புதிய செயலியை மத்திய உள்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. பெங்களூரில் மக்கள் இரவு பகலாக உழைக்கிறார்கள். குறிப்பாக IT-BT மற்றும் MNC நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வெகுநேரம் வரை நகரத்தில் சுற்றித் திரிகின்றனர்