Plastic Ban: இனியாவது மூச்சு விடுமா பூமி? ஜூலை முதல் பிளாஸ்டிக் தடை - அதிரடியாக அறிவித்த மத்திய அரசு!

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்த தடை ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

Continues below advertisement

ஜூலை 1 முதல் ஒரு முறை பயன்படும் பிளாஸ்டிக் உற்பத்தி, இறக்குமதி, விற்பனை, பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதைக் கண்காணிக்க மத்திய, மாநில அளவில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

முன்னதாகக் கடந்த 2019ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்குமாறு நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். 

அதைத் தொடர்ந்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்த தடை வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் கூறும்போது, ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் மிகவும் குறைவாக (பெரும்பாலும் ஒரு முறை) பயன்படுத்தப்பட்டாலும் நாடு முழுவதும் அதிக குப்பையை ஏற்படுத்துகின்றன. இவற்றைத் தடுக்க ஜூலை 1 முதல் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் உற்பத்தி, இறக்குமதி, விற்பனை, பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டி பொருட்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடையே நுழைவதைத் தடுக்க, எல்லைகளில் சோதனை மையங்கள் அமைக்கப்பட உள்ளன. 

Also Read | Plastic Ban Items: இயர் பட்ஸ், பிளாஸ்டிக் கப்; எந்தெந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை?- முழு விவரம்

கட்டுப்பாட்டு மையங்கள்

இதை முறையாக அமல்படுத்துவதற்காக, தேசிய மற்றும் மாநிலக் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்படும். முறைகேடாக ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி, இறக்குமதி, விற்பனை, பயன்படுத்துவது ஆகியவற்றைத் தவிர்க்க சிறப்பு அமலாக்கக் குழுக்கள் உருவாக்கப்படும். 

அதேபோல கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கான தடிமன் 50 மைக்ரானில் இருந்து 75 மைக்ரானாக அதிகரிக்கப்பட்டது. 2022 டிசம்பர் 31-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கான தடிமன் 120 மைக்ரானாக அதிகரிக்கப்பட உள்ளது.

அனைத்து பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள், மின்னணு வணிக நிறுவனங்கள், கடைக்காரர்கள், பள்ளி, மருத்துவமனை, வணிக வளாகம், திரையரங்குகள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்கும் இது தெரிவிக்கப்படுகிறது. 

இந்தத் தடையை மீறுவோர் மீது சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986-ன்படி, அபராதம், பொருட்கள் பறிமுதல், சம்பந்தப்பட்ட நிறுவனத்தையே மூடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 2019 ஜனவரி 1 முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிளாஸ்டிக் பொருட்கள், தடை, அவற்றுக்கான மாற்று குறித்து விரிவாக அறிய: https://tnpcb.gov.in/PPFTN/tamil/faq.php

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

Continues below advertisement