மக்களவை உறுப்பினர் ஸ்ரீகாந்த் ஷிண்டே, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் நாற்காலியில் அமர்ந்திருக்கும் புகைப்படம், எதிர்க்கட்சியினர் பலரால் பகிரப்பட்டு வைரலானது.
சர்ச்சைக்குரிய விளக்கம்
ஏக்நாத் ஷிண்டேவின் மகனான மக்களவை எம்.பி., ஸ்ரீகாந்த் ஷிண்டே இந்த சர்ச்சை குறித்து பேசுகையில், இது அவர்களின் வீட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும், தனது தந்தைக்காக நியமிக்கப்பட்ட எந்த அதிகாரப்பூர்வ நாற்காலியிலும் நான் அமரவில்லை என்றும் கூறி மேலும் சர்ச்சையை கிளப்பினார். மேலும் அது முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லம் கூட இல்லை, தானேயில் அமைந்துள்ள அவர்களின் தனிப்பட்ட குடியிருப்பு, அதில் உள்ள அலுவலகம், என்றார்.
ரவிகாந்த் வார்பே
என்சிபி செய்தித் தொடர்பாளர் ரவிகாந்த் வார்பே, சிவசேனா நிறுவனர் பாலாசாகேப் தாக்கரேயின் புகைப்படத்திற்கு முன்னால் ஸ்ரீகாந்த் நாற்காலியில் அமர்ந்திருக்கும் படத்தை ட்வீட் செய்துள்ளார். புகைப்படத்திற்கு கீழே வைக்கப்பட்டிருந்த பலகை மற்றும் நாற்காலியின் பின்னால் 'மகாராஷ்டிரா அரசு-முதல்வர்' என்று எழுதப்பட்டிருந்தது. அவரை சூப்பர் சிஎம் என்று அழைத்த என்சிபி தலைவர், "இது என்ன ராஜதர்மம்?" என்று எழுதி இருந்தார்.
தொடர்புடைய செய்திகள்: உருக உருக காதலித்தும் உள்ளம் நோகுதா! ஜாலியா படிங்க லவ் ராசிபலன்கள்!
பிரியங்கா சதுர்வேதி
முதல்வர் நாற்காலியை கேலி செய்த துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு எனது அனுதாபங்கள் என்று சேனா தலைவர் பிரியங்கா சதுர்வேதி கூறினார். "ஆதித்யா தாக்கரே அமைச்சராக இருந்தும் விவகாரங்களை கையாளும் போது அவர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டது. ஆனால் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் அமைச்சரும் இல்லை, எம்.எல்.ஏ.வும் இல்லை," என்று அவர் கூறி இருந்தார்.
அது நகரும் பலகை!
மேலும், "மஹாராஷ்டிராவின் துணை முதல்வருக்கு எனது அனுதாபங்கள், நாற்காலியை கேலி செய்ததற்காகவும் அவர் ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற பசிக்காக தன்னையே கேலி செய்ததற்காகவும்" என்று சதுர்வேதி ட்வீட் செய்துள்ளார். ஸ்ரீகாந்த் ஷிண்டே, படத்தில் தனக்குப் பின்னால் காணப்படும் பலகை மாறக்கூடிய ஒன்று என்றும், முதல்வரின் காணொளி கூட்டங்களை அவர் தனது இல்லத்தில் இருந்து நடத்துவதால் அங்கு கொண்டு வரப்பட்டதாகவும் கூறினார். "எனது தந்தை ஒரு நாளைக்கு 18 முதல் 20 மணிநேரம் வேலை செய்கிறார், முந்தைய முதல்வர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து இருந்ததைப் போலல்லாமல், எனது தந்தை எப்போதும் ஓடிக்கொண்டிருக்கிறார். மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க நானும் முதலமைச்சரும் இந்த அலுவலகத்தைப் பயன்படுத்துகிறோம். நான் முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்திலோ அல்லது அலுவலகத்திலோ இல்லை. இந்த பலகை மாறக்கூடியது," என்று அவர் கூறினார்.