ஒன் சைடு லவ்வுல இருக்க சுவாரஸ்யம் டபுள் சைடு லவ்வுல இல்லைனு நம்மில் பலபேர் சொல்லி நீங்க கேட்டு இருக்க வாய்ப்புகள் இருக்கு. நீங்களும் கூட இப்படி சொல்லி இருக்கலாம். அதுக்கு காரணம் என்றைக்காவது, நீங்கள் யோசித்ததுண்டா? தேடித்தேடி உருகி உருகி காத்திருந்து காதலித்த நீங்கள் தான், சொல்கிறீர்கள் டபுள் சைடு  காதல் கொஞ்சம் கசக்கிறது என்றெல்லாம். ஒன் சைடோ லவ்வோ டபுள் சைடோ லவ்வோ காதலை பொறுத்தவரை பொறுமை மிகவும் முக்கியம். ஒருதலைக் காதலாக இருக்கும் போது காத்திருக்க, நமக்கு சாதகமில்லாத பதிலை எதிர்கொள்ள, அழுத்தமான நிராகரிப்புக்கு பின்னரும் கூட காதலில் இருந்த பிடிப்பும் நம்பிக்கையும் பொறுமையும் இருதலைக் காதலில் இல்லாமல் போனது எங்கே? அதனை இருவருமாக சேர்ந்து எங்கே தொலைத்தீர்கள் என கொஞ்சமாவது யோசித்து அதனை மீண்டும் அடைய முற்பட்டதுண்டா? அதைச் செய்ய எது தடுக்கிறது? 


இந்த கேள்வியை நீங்களே உங்களுக்குள் கேட்டிருந்தால் உங்களுக்கு கிடைக்கும் பதில் உங்களின் ஈகோ, முன் முடிவு என்ற வரிசையில் பொறுமையின்மையும் இருக்கும். பொறுமையோடு இருந்த காத்திருப்பு காதலின் எல்லா கட்டத்திலும் இருக்க வேண்டும். பொறுமையின்மையால் காதலை இழந்த பலரை நம்மால் மிகவும் எளிதில் அடையாளம் காண முடியும். கொஞ்சம் பொறுமை இழந்து தவிக்கும் காதலர்களுக்காக உதவ தான் இந்த லவ் ராசிபலன். ஜாலியா படுச்சு ஹேப்பியா இருங்க. 




மேஷம்


உங்களுக்கு எத்தன தடவதான் சொல்றது. எதுலயும அவசரபடாம இருங்கனு. பேசாம ஒரு நாளஞ்சு நாளைக்கு உங்க மொபைல் ப்ராப்ளம்னு சொல்லிட்டு வாட்ஸ் அப் இன்ஸ்டானு எதுக்குமே போகாம இருங்க. உங்களோட இப்போதைய பிரச்சனைக்கு இதுதான் தீர்வு. இப்பவும் சொல்றேன் தடுமாறாதீங்க அவசரபடாதீங்க. நிதானமா இருங்க. 



ரிஷபம்


நீங்க சரியா பேசுனாலும் உங்க லவ்வர் கொஞ்சம் கரறா பேசுவாங்க. சோ அதுக்காக நீங்க முகத்த தூக்கி வெச்சுக்க வேண்டாம். அவங்ககிட்ட கொஞ்சம் எடுத்து சொல்லுங்க உங்க நிலமைய புரிஞ்சுப்பாங்க. எங்காவது அவங்க கூப்டாங்கனா போய்ட்டு வாங்க. 


மிதுனம்


ஒரு இளையராஜா பாடல் மாதிரி போய்ட்டு இருந்த உங்க லவ்வுல, கண்ணுபட்ட மாதிரி ஒரே மனஸ்தாபங்களா போய்ட்டு இருக்கு. நீங்களா பேசாத வரைக்கும் அது இப்படியே தான் தொடரும். ஒரு நல்ல லவ் சாங்கா உங்க லவ்வருக்கு அனுப்பீட்டு ஒரு ரோஜா எமோஜியும் சேத்து அனுப்புங்க. மீண்டும் உங்கள் காதல் தீபம் நல்லா பிரகாசமா ஒளிரும். வாழ்த்துகள். 



கடகம்


எப்போதும் உங்க காதலரோடு பேசிக்கொண்டே இருக்கனும்னு நினைக்குற நீங்க இன்னைக்கு மட்டும் கொஞ்சம் அளவா பேசுங்க. அப்பறம் வீட்டுல மாட்டீட்டு முழிக்காதீங்க.. மொத்தத்துல இன்னைக்கு கொஞ்சம் சூதானமா நடந்துக்காங்க. 


சிம்மம்


போன மாசம் ரிலீஸ் ஆன படத்துக்கு இன்னைக்கு போலானு ப்ளேன் போட்டிருப்பீங்க. ஆனா உங்க ஆபீஸ்ல லீவ் தரமாட்டாங்க இல்லனா அந்த படத்தயே தியேட்டர்ல இருந்து தூக்கியிருப்பாங்க. இதெல்லாம் சரியா இருந்தாலும் உங்களுக்கு தெருஞ்சவங்களும் தியேட்டருக்கு வந்திருப்பாங்க.  ஒரு பேட் டே தான் உங்களுக்கு. 


கன்னி


காதல்ல எப்பவுமே ஊறி கிடக்கும் உங்களுக்கு. இன்னைக்கும் ஒரு அதிஷ்ட நாள் தான். ஏதேதோ பொய் சொல்லீட்டு அவுட்டிங் போய்ட்டு இருந்த உங்களுக்கு இனி பொய் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது. ரொம்ப நாளா மனசுல போட்டு நீங்க யோசுச்சுட்டு இருந்த உங்க லவ் மேட்டர இன்னைக்கு வீட்டுல சொல்லிடுங்க. முதல்ல உங்க அம்மாட்ட சொல்லுங்க. அம்மாட்ட கிரீன் சிக்னல் வாங்குனதுக்கு அப்புறம் எல்லார்கிட்டயும் சொல்லிக்கலாம். தைரியமா போய் தெளிவா பேசுங்க. 



துலாம்


மூனு நாளா சண்ட போட்டுட்டே இருக்கீங்க. கம்முனு இன்னைக்கு நீங்களே போய் மன்னிப்பு கேட்டுடுங்க. விட்டுக்கொடுத்து போறதுதான் வாழ்க்கைக்கு நல்லது. சும்மா போய் சா...ரினு இழுக்காம ரெண்டு மூனு முத்தங்களையும் சேர்த்து கொடுங்க எல்லாம் சரி ஆகிடும்.  ஆல் த பெஸ்ட். 


விருச்சிகம்


 உங்களுக்கு எதுக்கு இத்தனை கோபம். மொதல்ல உங்க கோபத்த குறைங்க அதுக்கு அப்புறம் உங்க ரெண்டு பேருக்கும் இடையில இருக்குற டிஸ்டன்ச குறைக்கலாம். தயவு செய்து ராம ஆண்டாலும் ராவண ஆண்டாலும்னு மறுபடியும் இருக்காதீங்க. அப்பறம் ரொம்ப கஷ்டம் ஆகிடும்.  


தனுசு


நீங்க மனசுல சின்ன கீறல் அளவுக்கு கூட தயக்கம் இல்லாம உங்க காதல சொல்லுங்க. யார் பேச்சையும் கேட்காதீங்க, உங்க மனசு சொல்லுறத மட்டும் இன்னைக்கு கேளுங்க. ஆக்ட்சுவலி டு டே ஈஸ் யுவர் டே. 


மகரம்


இன்னைக்கு மட்டும் இல்ல இந்த வாரம் முழுக்க உங்களுக்கு நல்ல வாரம் தான். ஜாலியா இருங்க. முடுஞ்சா இன்னைக்கு ஸ்கை ப்ளூ கலர் டிரை பண்ணுங்க. உங்க ரூட் க்ளையரா இருக்கு. 


கும்பம்


உங்களுக்கு இன்னைக்கு என்ன நாள்னு கண்டு பிடிக்கறதுக்குள்ள எனக்கே போதும் போதும்னு ஆகிடுச்சு. நீங்களா எந்த முடிவும் இன்னைக்கு எடுக்காதீங்க. உங்க லவ்வர் சொல்றத மட்டும் கேளுங்க. உங்க அவுட்டிங் விசயத்த மட்டும் உங்க ப்ரெண்ட்ஸ்கிட்ட சொல்லாம போகாதீங்க. அப்பறம் வீட்டுல கூப்ட்டு கேட்டா மாட்டிக்குவீங்க. கவனம். 


மீனம்


ஃப்ளிப் கார்ட், அமேசான்ல எல்லாம் ஆஃபர் சேல் வரும்போது கண்ணு முழுச்சு நைட்டே ஆர்டர் போடுற உங்க லவ்வர் உங்க லவ் லைஃப்ல முக்கியமான நாட்கள மறந்துடுவாங்க. நீங்க எவ்வளவு திட்டுனாலும் திருந்தமாட்டாங்க. உங்களுக்கு தான் கஷ்டமா இருக்கும். கவலைல ஆரம்புச்சு கலகலப்புல முடியுற நாள்.