ஜனசேனாவின் தலைவர் பவன் கல்யாண் மகேந்திரா பிராண்டிலிருந்து எட்டு கார்களை வாங்கி அனைவரையும் திகைக்க வைத்துள்ளார். பவன் கல்யாண் தனது அரசியல் பிரசாரத்திற்காக பயணம் மேற்கொள்ள இந்த வாகனங்களை வாங்கியதாக  கூறப்படுகிறது.






இதுகுறித்து வெளியான தகவலின்படி, வருகின்ற 2024 ம் ஆண்டு ஆந்திராவில் சட்டபேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கு தயாராகும் வகையில் ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் ஆந்திராவில் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் மாநிலம் தழுவிய பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். அதற்காக, பிரச்சாரத்தின்போது தனக்கும் தனது ஊழியர்களுக்கும் பாதுகாப்பான போக்குவரத்துக்காக மகேந்திரா பிராண்டிலிருந்து எட்டு கார்களை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 






 பவன் மூன்று மாதங்களுக்கும் மேலாக பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாகவும், ரோட்ஷோவைத் தொடங்குவதற்கு முன்பாக, சாய் தரம் தேஜுடன் இணைந்து வினோதயா சித்தம் தெலுங்கு ரீமேக்கிற்கான படப்பிடிப்பை பவன் கல்யாண் முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 






பவன் கல்யாண் வாங்கிய அந்த கார்கள் அனைத்தும் நேற்று அவரது ஜன சேனா கட்சி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த 8 வண்டிகளும் பவன் கல்யாண் மேற்கொள்ள உள்ள பேருந்து பிரச்சாரப் பயணத்தின் அவருடைய 'கான்வாய்' ஆக செல்ல இருப்பதாகவும், சுமார் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் இந்த வண்டிகளை பவன் கல்யாண் அவரது சொந்தப் பணத்தின் மூலம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


Nayanthara Vignesh Shivan: மாமியார் வீட்டில் விருந்து மட்டுமில்லை... கேரள சேட்டனாக மாறிய விக்னேஷ் சிவன்!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண