Passport Seva Down: பாஸ்போர்ட் இணையதள சேவையானது எதற்காக 3 நாட்களுக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும், மீண்டும் எப்போது இயங்கும் என்பது குறித்தும் தெரிந்து கொள்வோம்.
3 நாட்கள் சேவை இயங்காது
பாஸ்போர்ட் சேவை இணையதளமானது, வரும் 29ம் தேதி இரவு 8 மணி தொடங்கி, செப்டம்பர் மாதம் 2ம் தேதி காலை 6 மணி வரை இயங்காது என வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக , இந்த 3 நாட்களுக்கு பாஸ்போர்ட் சேவை இணையதளமானது, செயல்படாது எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேர்காணல் மாற்றம்
மேலும் வரும் 30ம் தேதி நேர்காணல் திட்டமிடப்பட்டிருந்த விண்ணப்பதாரர்களுக்கு, நேர்காணல் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்காக, அவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அடுத்த நேர்காணல் குறித்த தகவல் தெரிவிக்கப்படும் என சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
உடனே விண்ணப்பிக்கவும்:
ஆகையால், பாஸ்போர்ட் விண்ணப்பிக்க திட்டமிட்டிருந்தவர்கள் இந்த 3 நாட்கள் செயல்படாது என்பதால், மிகவும் அவசரமாக விண்ணப்பிக்க விரும்பினால் இன்றோ அல்லது நாளை இரவு 8 மணிக்குள்ளோ விண்ணப்பித்து கொள்ளவும்.
மேலும் , பொது தகவல் பெற வேண்டியோ அல்லது சந்தேகத்தின் காரணமாக சென்னை அலுவலகம் செல்ல நினைத்திருப்பவர்கள் ஆகஸ்ட் 30 ஆம் தேதி செல்ல வேண்டாம் என்றும், அன்றைய நாள் அலுவலகம் மூடப்பட்டிருக்கும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையால், இந்த தகவலை பாஸ்போர்ட் விண்ணப்பித்திருப்பவர்கள் மற்றும் விண்ணப்பிக்க இருப்பவர்களுக்கு அனுப்பி தகவலை தெரிவியுங்கள்.
Also Read: இளைஞர்களை கவரும் டெலிவரி வேலை! மொத்தம் இத்தனை ஊழியர்களா? சம்பளம் எவ்வளவு தெரியுமா?