கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு மாணவ அமைப்பினர் நேற்று பேரணியில் ஈடுபட்டனர். இதில் மாணவர்களுடன் பெண்கள் உள்பட பொதுமக்கள் பங்கேற்றனர். இந்த பேரணியின்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் ஏராளமானோர் மீது தாக்குதல் நடத்தினர். போலீசாரின் தடியடிக்கும், கண்ணீர் புகை குண்டு வீச்சுக்கும் ஆளான பலரும் காயம் அடைந்தனர்.


ஹெல்மெட் அணிந்து பஸ் ஓட்டும் டிரைவர்கள்:


இந்த பேரணியில் மாணவர்கள் மீதும், பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதற்கும் கண்டனம் தெரிவித்து, பாஜக மேற்கு வங்கம் முழுவதும் பந்த் நடத்த அழைப்பு விடுத்தது. இதையடுத்து இன்று காலை முதல் அந்த மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு பந்த் நடந்து வருகிறது. 






பதற்றமான சூழல்:

இதனால் அந்த மாநிலத்தில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர், இதனால் பேருந்து ஓட்டுனர்கள் பாதுகாப்பு கருதி தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு வாகனத்தை இயக்கி வருகின்றனர். பேருந்து நடத்துனர்களும் அச்சத்தில் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு டிக்கெட் அளித்து வருக்கின்றனர்.


இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அரசு பணியாளர்கள் தங்களது பணிகளையே அச்சத்துடன் செய்யும் அவல நிலையினை கண்டு சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.  பெண் மறுத்தவர் கொலை விவகாரத்தில் நியாயமான விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.