இந்தியாவில் உள்ள டெலிவரி ஊழியர்களாக பணியாற்றி வருபவர்களிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 78 சதவிகிதம் பேர் ₹2.5 லட்சத்துக்கு கீழ் வருமானம் ஈட்டுவதாக அறிக்கை தெரிவிக்கிறது.
டெலிவரி ஊழியர்கள் அறிக்கை:
Borzo என்கிற டெலிவரி செய்யும் நிறுவனமானது, இந்தியாவில் டெலிவரி வேலை செய்யும் ஊழியர்களிடம், அவர்களது வருமானம் குறித்து ஆய்வு நடத்தியது. இந்தியாவில் உள்ள 40 நகரங்களில் Zomato, Swiggy, Uber மற்றும் Amazon போன்ற நிறுவனங்களில் பணியாற்றி வரும், சுமார் 2000 பேரிடம் ஆய்வு செய்தது.
டெலிவரி ஊழியர்களின் நிதி நிர்வாகம் சார்ந்த அறிவு ( Financial literacy of gig delivery partners ) என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டது. அதில், அவர்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள், எவ்வளவு சேமிக்கிறார்கள், எவ்வளவு முதலீடு செய்கிறார்கள், எத்தனை நபர்கள் வரி கட்டுகிறார்கள் என்பது குறித்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நிதி நிலைமை:
2,000 டெலிவரி ஊழியர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 78% பேர் ₹2.5 லட்சத்துக்கு குறைவாகவே சம்பாதிக்கின்றனர்.
ஆய்வுக்குட்படுத்த பட்டவர்களில் கிட்டத்தட்ட 61% வருமான வரி படிநிலைகள் பற்றி அறிந்திருக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர்.கணக்கெடுக்கப்பட்ட ஊழியர்களில் 33.5% பேர் மட்டுமே வருமான வரி வருமானத்தை (ITRs) தாக்கல் செய்திருக்கின்றனர்.
ஐடிஆர் தாக்கல் செய்தவர்களில், 66% பேர் பூஜ்ஜிய வருமானத்தை தாக்கல் செய்துள்ளனர் ( அதாவது 2.5 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பதாக )
சேமிப்பு:
24% ஊழியர்கள் மட்டுமே பொது வருங்கால வைப்பு நிதியில் (PPF) முதலீடு செய்துள்ளனர், பொதுவாக மாதத்திற்கு ₹1,000 முதல் ₹3,000 வரை பங்களிக்கின்றன.
முதலீடு:
23% பேர் மட்டுமே மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்துள்ளனர், அவர்களில் 71% பேர் மாதந்தோறும் ₹500 முதல் ₹1,000 வரை முதலீடு செய்துள்ளனர்.
சுமார் 26% பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்கிறார்கள்,
மேலும், இந்தியாவில் தற்போது 70 லட்சம் டெலிவரி ஊழியர்கள் உள்ளனர், 2030 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 2.5 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.