Parliament Winter Session LIVE: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்...மாநிலங்களவை நாளை காலை வரை ஒத்திவைப்பு..!
Parliament Winter Session 2022 LIVE Updates: இன்று தொடங்கி டிசம்பர் 29ஆம் தேதி வரை நடைபெறும் குளிர்கால கூட்டத்தொடரில் பல முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிலைநிடுக்கத்தை சமாளிக்க துருக்கிக்கு தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் இந்தியா அளிக்கும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
மாநிலங்களவை நாளை காலை 11:00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
"குஜராத் மீனவர்கள் இந்திய மீனவர்கள் என அழைக்கப்படும்போது, இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படும்போது அவர்களை ஏன் இந்திய மீனவர்கள் என்று அழைக்காமல் தமிழ்நாட்டு மீனவர்கள் என அழைக்கிறீர்கள். தமிழ்நாட்டு மீனவர்களை ஏன் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறீர்கள்?" என திமுக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளது.
தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நீதிமன்ற அமர்வுகளை அமைக்க மத்திய அரசிடம் திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
Background
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. இன்று தொடங்கி டிசம்பர் 29ஆம் தேதி வரை நடைபெறும் குளிர்கால கூட்டத்தொடர், மொத்தம் 17 வேலை நாட்கள் நடைபெறகிறது. அமர்வின் போது பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆக்கபூர்வமான விவாதங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த குடியரசு துணை தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று குடியரசு துணை தலைவராக பதவியேற்றுள்ள ஜெகதீப் தன்கர், புதிய மாநிலங்களவைத் தலைவராக பதவியேற்றுள்ளார். அவரை வரவேற்று பிரதமர் மோடி உரையாற்றினார்.
ஜனநாயக விழுமியங்களை மாநிலங்களவையின் தலைவரான தன்கர் நிலைநாட்டுவார் என்றும் நாடாளுமன்றத்தின் சார்பாகவும் நாட்டின் சார்பாகவும் வாழ்த்து தெரிவித்து கொள்வதாக மோடி தெரிவித்தார்.
"நாடு சுதந்திரம் அடைந்ததன் 75ஆவது ஆண்டு விழாவை கொண்டாடிவரும் நேரத்தில் ‘ Azadi Ka Amrit Mahotsav ’ நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் என்பது சிறப்பானது" என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் திரெளபது முர்மு மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோரையும் பிரதமர் பாராட்டி பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்கள் சந்திப்பு:
கூட்டத் தொடர் முக்கியமானது:
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குவதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ” இந்த கூட்டத் தொடர் மிகவும் முக்கியமானது. இதில் அனைத்து கட்சிகளும் கருத்தொற்றுமையுடன் செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மேலும், இந்த கூட்டத் தொடரில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என்றும் ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ள நிலையில் கூட்டத் தொடர் நடைபெறுவது முக்கியமானது என்றும் தெரிவித்தார்.
”மிகப்பெரிய கவுரவம்”
இதனை தொடர்ந்து அவர் கூறியதாவது, “ஜி20 அமைப்புக்கு தலைமையேற்றிருப்பது, இந்தியாவுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய கவுரவும். ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றிருப்பதை உலகமே உற்று நோக்குகிறது” என்றார்.
இதற்கிடையில், முதல்முறையாக இந்த கூட்டத் தொடரில் பங்கேற்கும் புதிய எம்.பிக்கள் மற்றும் இளம் எம்.பிக்கள் ஆகியோருக்கு கூட்டத் தொடரின் விவாதங்களில் பங்கேற்க அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் கேட்டுக்கொண்டார்.
தற்போதைய உலகளாவிய சூழ்நிலைக்கு மத்தியில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான புதிய வாய்ப்புகளை மனதில் கொண்டும், அனைத்து கட்சி தலைவர்களும் விவாதங்கள் மூலம் முக்கியமான முடிவுகளை இந்த அமர்வில் எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மகாராஷ்டிரா - கர்நாடக எல்லை பிரச்னை தொடர் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே நாடாளுமன்றத்தில் எழுப்பியுள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -