Onion Exports: மார்ச் 31, 2025 வரை மூக்கடலை மீதான இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வெங்காயம் மீது ஏற்றுமதி வரி:
இந்திய அரசாங்கம் வெள்ளியன்று வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீத வரி விதித்து உத்தரவிட்டது. இது மே 4, 2024 அதாவது இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. தற்போது, வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளது. இருப்பினும், இந்தியாவின் நட்பு நாடுகளுக்கு இங்கிருந்து வெங்காயம் தொடர்ந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதனிடயே மார்ச் 31, 2025 வரை மூக்கடலை மீதான இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 31, 2024 அன்று அல்லது அதற்கு முன் வெளியிடப்பட்ட நுழைவு மசோதாவின் கீழ், மஞ்சள் பட்டாணிக்கான இறக்குமதிக்கும் மத்திய அரசு வரி விலக்குகளை உயர்த்தியுள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்டில் தொடங்கி டிசம்பர் 2023 வரை வெங்காயத்திற்கு 40 சதவீத ஏற்றுமதி வரியை இந்திய அரசு விதித்தது குறிப்பிடத்தக்கது.
வரி விதிப்புக்கான காரணம் என்ன?
வெங்காய ஏற்றுமதிக்கு அதிகப்படியான வரி விதிப்பு என்பது முதலில் உள்நாட்டு விநியோக நிலைகளைப் பாதுகாப்பதற்காகவும், சந்தையில் விளைபொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தவும் செயல்படுத்தப்பட்டது. இருப்பினும், கடந்த வாரம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பூட்டான், பஹ்ரைன், இலங்கை, மொரிஷியஸ் மற்றும் வங்கதேசம் போன்ற, அண்டை நாடுகளுக்கு 99,150 மெட்ரிக் டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய அரசாங்கம் அனுமதித்தது.
2023-24 சீசனில் உற்பத்தி குறையும் என்று எதிர்பார்த்து, உலகளாவிய தேவை அதிகரிப்பதோடு, உள்நாட்டு தேவையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க அரசாங்கம் முதலில் வரி விதிப்பு நடவடிக்கை எடுத்தது. ரபி-2024 பருவ விளைபொருளில் இருந்து வெங்காய இருப்புக்கான, கொள்முதல் இலக்கு 500,000 டன்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அமைச்சகம் முன்னதாக தெரிவித்து இருந்தது.
தொடரும் வெள்ளை வெங்காயம் ஏற்றுமதி:
2,000 மெட்ரிக் டன் வெள்ளை வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது. குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் உள்ள சந்தைகளுக்கான, ஏற்றுமதி தேவைக்காக வெள்ளை வெங்காயம் வளர்க்கப்படுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், வெள்ளை வெங்காயத்தின் சாகுபடியானது ஏற்றுமதியை பூர்த்தி செய்வதற்காக பிரத்யேகமாக செய்யப்படுகிறது. இது மற்ற பயிர் வகைகளுக்கு எதிராக உற்பத்தி செலவுகளை அதிகரிக்க வழிவகுக்கிறது.
அதிக விதைச் செலவுகள், கடுமையான நல்ல விவசாய நடைமுறைகளை (ஜிஏபி) பின்பற்றி, அதிகபட்ச வரம்புகள் (எம்ஆர்எல்) விதிமுறைகளை கடைபிடிப்பது பயிர் வகைக்கான செலவுகளை அதிகரிக்கிறது.