PPF Account: பிபிஎஃப் கணக்கு சேமிப்பு திட்டத்தில், எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும் என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.


PPF கணக்கு சேமிப்பு திட்டம்:


நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள், பணக்க்காரர்கள் ஆக வேண்டும் என்று கனவு காண்கிறார்கள் ஆனால், அவர்களில் வெகு சிலரே இந்த கனவை எப்படி நிறைவேற்றுவதற்கனா முயற்சியில் ஈடுபடுகிறார்கள். நீங்கள் மாத சம்பளம் பெறுபவராக இருந்தால், உங்கள் வேலைக்கு செல்ல தொடங்கும் காலத்தின் தொடக்கத்திலேயே முதலீடு செய்வது சிறந்தது. நீங்கள் எவ்வளவு நீண்ட காலத்திற்கு முதலீடு செய்கிறீர்களோ, அவ்வளவு நல்ல வருமானம் கிடைக்கும். உங்களை கோடீஸ்வரராக்கும் அஞ்சல் அலுவலகத்தின் ஒரு திட்டத்தைப் பற்றி நாங்கள் உங்களுக்கு எடுத்துரைக்கிறோம்.


 உங்களை கோடீஸ்வரராக்கும் தபால் அலுவலக திட்டம்:


பிபிஎஃப் கணக்கில் ஒவ்வொரு மாதமும் ரூ.12,500 டெபாசிட் செய்து 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால். அதாவது, தினமும் ரூ.416 சேமித்து முதலீடு செய்ய வேண்டும். இதன் மூலம் திட்டத்தின் முடிவில் நீங்கள் ரூ.40.68 லட்சத்தை முதிர்ச்சித் தொகையாக பெறுவீர்கள். இதில் உங்களின் மொத்த முதலீடு ரூ.22.50 லட்சமாகவும், வட்டி வருமானம் ரூ.18.18 லட்சமாகவும் இருக்கும். இந்த கணக்கீடு அடுத்த 15 ஆண்டுகளுக்கு 7.1 சதவிகித வருடாந்திர வட்டியின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது. வட்டி விகிதம் மாறும்போது முதிர்வுத் தொகை மாறலாம். PPF இல் வட்டி கூட்டு வட்டி அடிப்படையில் கிடைக்கும்.


எப்படி கோடிஸ்வரர் ஆவீர்கள்?


இந்தத் திட்டத்தின் மூலம் நீங்கள் கோடீஸ்வரர் ஆக விரும்பினால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு முறை, தலா  5 ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தை நீட்டிக்க வேண்டும். அதாவது, இப்போது உங்கள் முதலீட்டு காலம் 25 ஆண்டுகளாக இருக்கும். 25 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுக்கு மொத்தம் ரூ.1.03 கோடி கிடைக்கும். இந்தக் காலகட்டத்தில் உங்களின் மொத்த முதலீடு ரூ. 37.50 லட்சமாக இருக்கும், அதே சமயம் வட்டி வருமானமாக ரூ.65.58 லட்சத்தைப் பெறுவீர்கள்.  நீங்கள் PPF கணக்கை நீட்டிக்க விரும்பினால், முதிர்ச்சிக்கு ஒரு வருடத்திற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். முதிர்வுக்குப் பிறகு கணக்கு நீட்டிக்கப்படாது.


வரி விலக்கு:


PPF திட்டத்தின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், அது வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரி விலக்கு பெறுகிறது. இந்தத் திட்டத்தில், ரூ. 1.5 லட்சம் வரையிலான முதலீட்டில் தள்ளுபடியைப் பெறலாம். பிபிஎஃப் மீது பெறப்படும் வட்டிக்கும் வரி விதிக்கப்படவில்லை. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அரசாங்கம் சிறு சேமிப்பு திட்டங்களை ஊக்குவிக்கிறது. எனவே இதில் முதலீடு செய்வது முற்றிலும் பாதுகாப்பானது என்பதோடு வருவாயையும் உறுதி செய்கிறது.