Coromandel Express Accident: ஒடிசாவின் பாலசோரில் நேற்று மாலை 7 மணியளவில் கொல்கத்தாவில் இருந்து சென்னை அந்த கோரமண்டல் எக்ஸ்பிர்ஸ் ரயில் தடம் புரண்டதில் இதுவரை 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஷாலிமார்-சென்னை கோரமண்டல் விரைவு ரயிலின் 10 முதல் 12 பெட்டிகள் தடம் புரண்டதால், எதிர் தண்டவாளத்தில் விழுந்தன. அதைத் தொடர்ந்து, பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியது. இந்த ரயிலில் இருந்த 4 பெட்டிகளுக்கு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
தொடர்ந்து, தடம் புரண்ட பெட்டிகள் மீது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் மோதியத்தில் பெரும் சேதம் மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டது. இந்தநிலையில், எந்தெந்த பெட்டிகள் விபத்துக்குள்ளானது என்பது குறித்த முழுவிவரங்களை இங்கு பார்க்கலாம்..
கோரமண்டல் எக்ஸ்பிரஸ்:
விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸில், மொத்தமாக 23 பெட்டிகள் இருந்துள்ளது. அவற்றில், முதல் ஐந்து பெட்டிகள் தூங்கும் வசதி கொண்ட முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளாகும். அடுத்ததாக உள்ள 12 பெட்டிகள், 'ஏசி' வசதியுடையவை. இது தவிர, முன்பதிவு செய்யப்படாத ஆறு பெட்டிகளும் இருந்துள்ளது.
இதில், ஏ1,ஏ2, பி2, பி3, பி4, பி5, பி6, பி7, பி8, பிடி ஆகிய பெட்டிகள் தடம் புரண்டதாக கூறப்படுகிறது. ரயில்வே நிர்வாகம் தெரிவித்த தகவலின்படி, இந்த ரயிலில் பயணிக்க 869 பேர் முன்பதிவு செய்திருந்ததாகவும், இந்த ரயில், இன்று மாலை (ஜூன் 3ம் தேதி) 4. 50 மணிக்கு சென்னை வந்தடைய இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.
ஹவுரா ரயில்:
பெங்களூரு சர் எம். விஸ்வேஸ்வரய்யா ரயில் நிலையத்தில் இருந்து, ஹவுரா சூப்பர் பாஸ்ட் ரயில், நேற்று முன்தினம் காலை 10:35 மணிக்கு புறப்பட்டது. இந்த ரயிலானது நேற்று இரவு 7.55 மணிக்கு மேற்கு வங்கத்தின் ஹவுராவுக்கு சென்றிருக்க வேண்டிய நிலையில், ஒடிசா அருகே இந்த ரயில் உட்பட மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கின.
ஹவுரா சூப்பர் பாஸ்ட் ரயிலில், முன் பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் 994 பயணியர்களும், முன் பதிவு செய்யப்படாத இரண்டு பெட்டிகளில் 300 பேரும் பயணித்திருக்க கூடும் என தெரிய வந்துள்ளது.
அவசரகால தொலைப்பேசி எண்:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவசர கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 044- 25330952, 044- 25330953, 044- 25354771, 044- 25354146 என்ற எண்கள் மூலம் தொடர்பு கொண்டு விபத்து குறித்த தகவல்களை சம்பந்தப்பட்ட ரயில்களில் பயணித்த அறிந்து கொள்ளலாம். இதேபோல் சென்னை எழிலகத்தில் ரயிலில் பயணித்த பயணிகளின் குடும்பத்தினருக்கு உதவ மாநில சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.1070, 044 - 28593990, 9445869848, 9445869843 ஆகிய எண்கள் வழியாகவும் பயணிகளின் தகவலை பெறலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும் காட்பாடியில் அமைக்கப்பட்டுள்ள அவசர கட்டுப்பாட்டு அறைக்கு 9498651927, ஜோலார்பேட்டை அவசர கட்டுப்பாட்டு அறை 7708061811 ஆகிய எண்கள் மூலம் தகவல் பெறலாம்.
பெங்களூரு ரயிலுக்கான உதவி எண்கள்:
பெங்களூரு - 080 22356409
பங்கார்பேட் - 08153255253
குப்பம் - 8431403419
பெங்களூரு சர் எம். விஸ்வேஸ்வரய்யா ரயில் நிலையம் - 9606005129
கிருஷ்ணராஜபுரம் - 8861203980