ஃபேஸ்புக் காதல்..
ஃபேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டு காதலாக மாறி திருமணம் நடைபெறுவது சமீபத்தில் வழக்கமாக மாறி வருகிறது. அந்தவகையில் ஃபேஸ்புக் ஏற்பட்ட நட்பு ஒருவருக்கு பெரும் விபரீதமாக மாறியுள்ளது. இவர் ஃபேஸ்புக் மூலம் திருமணம் செய்த நபர் பெண் இல்லை என்பது மிகப் பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் நார்த் பர்கானா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அலோக் குமார் மிஸ்ட்ரி. இவருக்கு ஃபேஸ்புக் மூலம் ஓடிசாவைச் சேர்ந்த மேக்னா மண்டல் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு இருவருக்கும் ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறியுள்ளது. இதைத் தொடர்ந்து அலோக் குமார் மிஸ்டரி அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளார்.
திருமணம்
கடந்த மே 24ஆம் தேதி அலோக் குமார் மேக்னாவை தன்னுடைய தாய்மாமா வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் ஒரு சிறிய திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த நபர் ஒருவர் மணப்பெண்ணை பார்த்து மேக்னாட் என்ற ஆண் பெயரில் அழைத்துள்ளார். இதை கேட்டு மணமகனின் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அந்த விழாவிற்கு வந்த நபர் மணமகளாக இருப்பவர் பெண் இல்லை என்பதை தெளிவாக கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகன் குடும்பத்தினர் கடும் துயரத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் அந்த மணமகளாக இருந்த மேக்னாட்டை விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் பல ஆண்களை இதுபோன்று பெண்ணாக நடித்து ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது.
அதன்பின்னர் ஆத்திரம் அடைந்த குடும்பத்தினர் மேக்னாட்டை அரை நிர்வாணப்படுத்தி கடுமையாக தாக்கியுள்ளனர். அத்துடன் அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். ஃபேஸ்புக் மூலம் ஏற்பட்ட காதல் விபரீதமாக மாறியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நபர் வேறு யார் யாரெல்லாம் ஏமாற்றியுள்ளார் என்பது தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க:வாவ்.. இப்படி ஒன்னு இருக்கா? எறும்பா? எட்டுக்கால் பூச்சியா?.. கேரளாவில் கண்டுபிடிக்கப்பட்ட பணச்சிலந்தி..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்