உலகின் தலைசிறந்த இலக்கிய விருதுகளில் ஒன்றான சர்வதேச புக்கர் விருது, Tomb of Sand என்ற புத்தகத்தை எழுதிய இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீக்கு வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச புக்கர் பரிசு 2022
இதன் மூலம் இந்திய மொழிகளில் சர்வதேச புக்கர் பரிசு பெறும் முதல் புத்தகம் எனும் பெருமையை டாம்ப் ஆஃப் சேண்ட் பெற்றுள்ளது.
விருதுடன் பரிசுத்தொகையாக 50 லட்சம் ரூபாயும் (50 ஆயிரம் பவுண்ட்) வழங்கப்பட்ட நிலையில், இந்தப் புத்தகத்தை இந்தியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அமெரிக்க மொழிபெயர்ப்பாளர் டெய்ஸி ராக்வெல்லுடன் கீதாஞ்சலி பரிசுத்தொகையை பகிர்ந்து கொண்டுள்ளார்.
லண்டனில் நடைபெற்ற விழா
முன்னதாக பிரிட்டனின் லண்டன் மாநகரில் நடைபெற்ற பரிசு வழங்கும் விழாவில் பங்கேற்ற கீதாஞ்சலி, இந்த மாபெரும் அங்கீகாரத்தைப் பெறுவதில் தான் பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
வட இந்தியாவில் வாழும் 80 வயது பெண்மணியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மொத்தம் 135 புத்தகங்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், கீதாஞ்சலியின் இந்த 75 பக்க நாவல் மொத்தம் ஐந்து புத்தகங்களுடன் போட்டியிட்டு விருதை தட்டிச் சென்றுள்ளது.
முன்னதாக, புக்கர் விருது பெறும் முதல் இந்தியர் கீதாஞ்சலி அல்ல எனும் வாதங்கள் சமூக வலைதளங்களில் முன் வைக்கப்பட்டன.
புக்கர் Vs சர்வதேச புக்கர்
புக்கர் பரிசு என்பது 1969ஆம் ஆண்டு தொடங்கி, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வெளியிடப்படும் ஆங்கில புத்தகங்களுக்கு வழங்கப்பட்டு வரும் விருதாகும். மேலும், 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆங்கில மொழியில் எழுதப்படும் அனைத்து நாவல்களுக்கும் இந்த புக்கர் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
அதேநேரம், பிற மொழிகளில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நாவல்களுக்கு 2005ஆம் ஆண்டு தொடங்கி சர்வதேச புக்கர் பரிசானது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கீதாஞ்சலி ஸ்ரீ சர்வதேச புக்கர் பரிசு பெற்ற முதல் இந்தியர் ஆவார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்