ஒடிசாவின் ஜார்சுகுடாவில் தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது நிலக்கரி ஏற்றிச் சென்ற டிரக் வெள்ளிக்கிழமை இரவு மோதியதில் தற்போதுவரை 6 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வந்துள்ளன. மேலும் 24 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜார்சுகுடா - சம்பல்பூர் பிஜு விரைவு சாலையில் ரூர்கேலா பைபாஸ் அருகே இந்த விபத்து நடந்துள்ளது.
ட்ரக் - பேருந்து மோதி விபத்து
காவல் துறையினர் அறிக்கையின்படி, ஜார்சுகுடா பைபாஸ் சாலையில் பவர் ஹவுஸ் சாக் அருகே டிரக் ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் பின்புறம் மோதி உள்ளது. JSW ஆலையில் இருந்து ஜார்சுகுடா நகருக்கு அதன் ஊழியர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து சென்று கொண்டிருந்தது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஆலையில் பணியை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிர சிகிச்சை
இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், குறைந்தது 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் போலீசார் உறுதிப்படுத்தினர். 10 பேர் சம்பல்பூர் புர்லாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். மிகவும் சீரியஸாக உள்ள மீதமுள்ள 14 பேர் சம்பல்பூரின் பர்லாவில் உள்ள வீர் சுரேந்திர சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (VIMSAR) சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்: பரவி வரும் வைரஸ் காய்ச்சல்: பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அறிவிப்பு
இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம்!
படுகாயமடைந்தவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதால், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்பதால் ஜார்சுகுடா டிஎம் மற்றும் அதிகாரிகள் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.
எஸ்.ஐ. தகவல்
வீர் சுரேந்திர சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜார்சுகுடா காவல் துணைக் கண்காணிப்பாளர் என்.மஹாபத்ரா, "ஒரு நிறுவனத்தின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஜார்சுகுடாவில் நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பெரும்பாலான ஊழியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த 10 பேர் சம்பல்பூரில் உள்ள புர்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், 14 பேர் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்