புதுச்சேரியில் பரவி வரும் ஃப்ளூ காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அறிவிப்பு- 17ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறையாளித்து கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக சிறியவர், பெரியவர் என அனைத்து தரப்பினரும் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. இதனை கண்டு மக்கள் பயப்பட வேண்டாம் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.


இதுதொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- புதுச்சேரி மாநிலத்தில் மழைக்காலத்தில் பொதுவாக பரவும் வைரஸ் காய்ச்சல் (ஃப்ளூ) தற்போது பரவி வருகிறது. கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டதால் கடந்த 2 வருடங்களாக பரவக்கூடிய மழைக்கால காய்ச்சல் குறைவாக இருந்தது. கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் மக்கள் முகக்கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமலும், கூட்ட நெரிசல்களில் செல்வதாலும் இந்த மழைக்காலத்தில் பரவும் சாதாரண வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.


இந்த நிலையை சமாளிக்க புதுச்சேரி சுகாதாரத்துறை புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாமில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளிலும் இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரியிலும், ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவ மனையிலும், காய்ச்சலுக்கான பிரத்யேக வெளிப்புற சிகிச்சையும், உள்புற சிகிச்சை வார்டும் 24 மணிநேரமும் தற்போது இயங்கிக் கொண்டுள்ளது. இந்த சிகிச்சைக்காக போதுமான டாக்டர்களும், மருந்துகளும் இருக்கிறது. அதுமட்டுமின்றி ஆரம்ப சுகாதார மையங்களிலும் காய்ச்சலுக்கான பிரத்யேக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சலை தடுக்க முன்களப்பணியாளர்கள் முடுக்கி விடப்பட்டுள்ளனர். புதுச்சேரி மக்கள் காய்ச்சிய குடிநீரை அருந்தும்படியும், முகக்கவசம் அணியும் படியும், தனிமனித இடைவெளி எப்போதும் கடை பிடிக்க வேண்டும். வீட்டில் காய்ச்சல் நோயாளி யாரேனும் இருந்தால் அந்த நோயாளி கண்டிப்பாக முகக்கவசம் அணியவும் தனிமைப்படுத்தி கொள்ளவும் வேண்டும். பயப்பட வேண்டாம் வெளிப்புற உணவுகளை மக்கள் தவிர்க்க வேண்டும். வீட்டை சுற்றி மழை தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மழைக்காலத்தில் பரவக்கூடிய வைரஸ் காய்ச்சலுக்காக மக்கள் யாரும் பயப்பட வேண்டாம். உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால் இக்காய்ச்சலில் இருந்து விடுபடலாம் என தெரிவித்துள்ளனர்.









 




இளங்கலை பட்டப்படிப்புகளில் தமிழ் கட்டாயம்: உயர் கல்வித்துறை உத்தரவு


shashi tharoor : காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆகிறாரா சசிதரூர்? உள்கட்சித் தேர்தல் பரபரப்பு




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர