பழுதான காரை ஒழுங்காக சர்வீஸ் செய்து தராததால் கார் நிறுவனத்துக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
நெல்லையில் சர்வீஸ் செய்ய கொடுத்த காரை முறையாக பராமரிக்காத நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
திருநெல்வேலியைச் சேர்ந்தவர் முருகன். இவர் கடந்த 2023ஆம் ஆண்டு தனது காரை சர்வீஸ் செய்ய கார் நிறுவனத்திடம் கொடுத்துள்ளார். அப்போது வந்த வெள்ளம் இவரது காரை மேலும் சேதமாக்கியுள்ளது.
சர்வீஸ் செய்ய கொடுத்த கார் சேதமடைந்ததையடுத்து கார் நிறுவனம் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் முருகன் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் பழுதான காரை ஒழுங்காக சர்வீஸ் செய்து தராததால் கார் நிறுவனத்துக்கு அபராதம் விதித்தது. சர்வீஸ் செய்ய கொடுத்த காரை முறையாக பராமரிக்காத நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதித்தது.
அதாவது கார் நிறுவனத்துக்கு ரூ. 10 லட்சம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த பத்து லட்சம் ரூபாய் மனுதாரருக்கு தர ஆணை இடப்பட்டுள்ளது.
நுகர்வோர் நீதிமன்றம், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986-ன் கீழ், நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், பொருட்கள் மற்றும் சேவைகளில் குறைபாடு இருந்தால் அவற்றை புகாராக தெரிவித்தால் அவற்றை விசாரித்து தீர்ப்பு வழங்கும்.
மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் நேரடியாகவோ, வழக்கறிஞர் மூலமாகவோ வழக்கை தாக்கல் செய்தால் நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பை வழங்கும். வழக்கு தாக்கல் செய்யும் போது பொருட்களுக்கான பில், ரசீது போன்ற ஆவணங்களையும் சேர்த்து தாக்கல் செய்வது அவசியம்.