குதிரைப் பந்தயத்துக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை விளக்கினார். அப்போது, குதிரை பந்தயத்திற்கு பதில் குதிரை பேரம் என அவர் பேசியது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


 






இது தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியான வீடியோவில், "குதிரைப் பந்தயம்" என்பதற்குப் பதிலாக "குதிரை பேரம்" என்று மத்திய அமைச்சர் கூறுவதைக் கேட்கலாம். பின்னர், தான் சொன்னதை திருத்தி கொண்டார். 


 






நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு பல எதிர்கட்சி தலைவர்கள் எதிர் வினையாற்றி உள்ளனர். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு தலைவர் பவன் கேரா ட்விட்டர் பக்கத்தில், "வாக்குகளை தவிர்த்து நிர்மலா சீதாராமனுக்கு யோசிக்கும் திறன் இருப்பது எனக்கு தெரியும். ஆமாம், குதிரை பேரத்திற்கு ஜிஎஸ்டி விதிக்க வேண்டும்" என கலாய்த்து உள்ளார்.


காங்கிரஸ் கட்சியின் செயலாளர் வினீத் புனியாவும் வீடியோவை ட்வீட் செய்து, "குதிரை பேரத்திற்கு ஜிஎஸ்டி விதிக்கும் நிர்மலா சீதாராமனின் திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம்" என பதிவிட்டுள்ளார். 


 






இது பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, "உண்மை வெளியே வந்துள்ளது? குதிரை பேரத்திற்கு ஜிஎஸ்டி!" என பதிவிட்டுள்ளார்.


இதையும் படிக்க: டிடிவி தினகரனோடு உறவு; குடும்பத்தை மட்டும் பார்க்கிறார் ஓபிஎஸ்: பரபரப்பை கிளப்பும் உதயகுமார்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண