2 நாட்களாக கன மழை:


கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் பெய்த வரும் கனமழையால்  மங்களூர் மாநகரின் புறநகர் பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. இதனால் மங்களூரில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள் ஆங்காங்கே சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்து நின்றது.


மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் சிக்கி தவிப்பு:


மங்களூருவின் அடையாறில் இருந்து கண்ணூர் செல்லும் நெடுஞ்சாலை யில்  தண்ணீர் தேங்கி நின்றதால் மக்கள் இரு சக்கர வாகனத்தில்கூட செல்லமுடியாத நிலைமை  ஏற்பட்டது.  கண்ணூரில் உள்ள தனியார் மருத்துவமனை வளாகத்திலும் தண்ணீர் புகுந்தது. மங்களூருவில் இருந்து மூடபித்ரி செல்லும் சாலை போக்குவரத்து நெரிசல்  ஏற்பட்டது. தேசிய நெடுஞ்சாலையின் அருகே குல்சேகர், குடுப்பு முதல் சக்திநகர் வரையிலான போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது மற்றும் பொதுமக்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நகராது மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் சிக்கித் தவித்தனர். கோட்டாரா சௌக்கி மற்றும் நகரின் பல பகுதிகளில் மழை காரணமாக சாலைகளில் குறுக்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது .


பல்வேறு பகுதிகளில் கன மழை- ஆரஞ்ச் அலர்ட்


தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி ,சுள்ளியா  மூடபித்ரி முல்கி பகுதிகளிலும் கனமழை கொட்டியது. இதனால் நேத்ராவதி, குமாரதாரா ,பால்குனி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது . மேலும் உடுப்பி மற்றும் உத்தர கன்னடா  மாவட்டத்திலும்  கனமழை பெய்து வருகிறது. காபு, கார்க்கலா , பிரம்மாவர் ,பைந்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும்  பகல் முழுவதும் கனமழை பெய்தது. அதேபோல உத்தர கன்னடா  மாவட்டம் முருடேஸ்வர் ,
கார்வார்,சித்தாப்புரா, பட்கல் மற்றும் அங்கோலா பகுதிகளிலும்  ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டிருந்தது.


மீன்பிடிக்க செல்லவில்லை:


காலை முதல் மாலை வரை கனமழை பெய்த காரணத்தால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது. மேலும் அரபி கடலில் அலையின் சீற்றம் அதிகமாக இருந்ததால், மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.


மழை நீடிக்க வாய்ப்பு:




இந்த மழை  வெள்ளிக்கிழமையும் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் மழை நீடித்ததால், விடுமுறை அறிவிக்கப்படுவதாக தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டர் ராஜேந்திரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண