கடந்த 1970ஆம் ஆண்டு, ஜூலை 22ஆம் தேதி பிறந்த தேவேந்திர கங்காதர் ஃபட்னாவிஸ், பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக உள்ளார்.




இவர் மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார். மகாராஷ்டிராவின் நாக்பூரில் பிராமண குடும்பத்தில் பிறந்த இவர், 44ஆவது வயதில், சரத் பவாருக்குப் பிறகு மாநிலத்தின் இளைய முதலமைச்சராக பதவி ஏற்று கொண்டார். 


கடந்த 2014ஆம் ஆண்டு, அக்டோபர் 31ஆம் தேதி, மும்பை வான்கடே மைதானத்தில் மகாராஷ்டிர முதலமைச்சராக முதல்முறையாக பதவி ஏற்று கொண்டார்.


தனது கல்வி படிப்பை நாக்பூரில் உள்ள சங்கர் நகர் சௌக்கில் உள்ள சரஸ்வதி வித்யாலயாவில் முடித்தார். ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டக் கல்வியைத் தொடர நாக்பூரில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். 1992 ஆம் ஆண்டு, பட்டம் பெற்ற இவர், பெர்லினில் உள்ள டி.எஸ்.இ.யில் முதுகலை வணிக மேலாண்மை பட்டமும் திட்ட மேலாண்மை டிப்ளோமாவும் பெற்றார்.


 






2006ஆம் ஆண்டு, ஃபட்னாவிஸ் அம்ருதா ரானடேவை திருமணம் செய்து கொண்டார். இவர் நாக்பூரில் உள்ள ஆக்சிஸ் வங்கியில் இணை துணைத் தலைவராகப் பணிபுரிகிறார். இந்த தம்பதியருக்கு ஐந்து வயதில் திவிஜா ஃபட்னாவிஸ் என்ற பெண் குழந்தை உள்ளது.


கடந்த 2019ஆம் ஆண்டு, தொடர் அரசியல் பரபரப்புக்கிடையே, மகாராஷ்டிராவின் முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ் நவம்பர் 23 அன்று பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவாரின் ஆதரவோடு பாஜக ஆட்சி அமைத்தது. இருப்பினும், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேற அந்த அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, காங்கிரஸ் கூட்டணி அமைக்க உத்தவ் முதலமைச்சராக பொறுப்பு ஏற்றார்.




2019ஆம் ஆண்டு தேர்தலில், நாக்பூர் தென்மேற்கு சட்டப்பேரவை தொகுதியில், தேவேந்திர ஃபட்னாவிஸ் மீண்டும் வெற்றி பெற்றார். அவர் 49,344 வாக்குகள் வித்தியாசத்தில் இந்திய தேசிய காங்கிரஸின் ஆஷிஷ் தேஷ்முக்கை தோற்கடித்தார். பாஜக, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்ததையடுத்து, எதிர்க்கட்சி தலைவராக ஃபட்னாவிஸ் பொறுப்பு வகித்து வந்தார்.


2019 தேர்தலில், கூட்டணி அமைத்திருந்தாலும், முதலமைச்சர் பதவியை காரணம் காட்டி வெளியேறிய சிவசேனாவை உடைத்து தற்போது பழிக்கு பழி வாங்கியுள்ளார் ஃபட்னாவிஸ். 


இதையும் படிக்க: டிடிவி தினகரனோடு உறவு; குடும்பத்தை மட்டும் பார்க்கிறார் ஓபிஎஸ்: பரபரப்பை கிளப்பும் உதயகுமார்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண