நாகாலாந்தில் பாதுகாப்புப் படையினர் தவறுதலாக நடத்திய தாக்குதலில் அப்பாவி பழங்குடியின மக்கள் உயிரிழந்தனர். இதன், காரணமாக நாகலாந்து மாநிலம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை தற்போது அங்கு நிலவி வருகிறது.
இந்நிலையில், நாகாலந்து மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும், தற்போதைய தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவி தற்போது புதுடெல்லி விரைந்துள்ளார்.
2014 முதல் தேசிய சோசியலிஸ்ட் கவுன்சில் ஆப் நாகாலாந்து குழுவிற்கும் இந்திய அரசிற்கும் இடையில் மத்தியஸ்தராகப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். இவரது முயற்சியின் பலனாகப் போராட்டக் குழுவிற்கும் இந்திய அரசிற்கும் இடையே நாகாலாந்து அமைதி உடன்படிக்கை ஆகஸ்ட் 2015 இல் கையெழுத்தானது.
இந்த அமைதி ஒப்பந்தத்தை செயல்படுத்தும் விதமாக என் எஸ் சி என் (என்கே), என் எஸ் சி என் (ஆர்), என் எஸ் சி என் (கே)-காங்கோ , தேசிய சோஷியலிஸ்ட் குழு (கே) நிக்கி ஆகிய நாகா குழுக்களுடன் சண்டை நிறுத்த ஒப்பந்தங்களில் மத்திய அரசு கையெழுத்திட்டது.
தற்போது, தமிழ்நாடு ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவி, 2019 ஜூலை முதல் 2021 செப்டம்பர் வரை நாகாலாந்து மாநில ஆளுநராகப் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும், வாசிக்க: