மும்பையில் பெய்துவரும் கனமழை காரணமாக நிலச்சரிவில் புதையுண்டும், வீட்டுச் சுவர் இடிந்து விழுந்தும் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

  


நேற்று இரவு முழுவதும் பெய்த தொடர்மழை காரணமாக மஹூல் நகரில் புதிய பாரத் நகர் பகுதியில் அமைந்துள்ள கட்டிடத்தில் பொது மக்கள் தங்கவைக்கப்பட்டனர். அப்போது, அக்கட்டித்தின் சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் 12 பேர் பரிதாமாக உயிரிழந்தனர். இரண்டு பேர் காயமடைந்தனர். மேலும், கனமழை காரணமாக விக்ரோலி கிழக்கில் உள்ள மற்றொரு நகரில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 3 பேர் உயிரிழந்தனர்.






தென்மேற்கு பருவமழை தற்போது டெல்லி வரை முன்னேறியுள்ளது.வங்காள விரிகுடாவில் இருந்து கிழக்கு நோக்கி கீழ்மட்டத்தில்  வீசும் ஈரப்பதமான காற்று காரணமாக கடந்த 4 நாட்களில் மேகம் அதிகரித்து பரவலாக மழை பெய்து வருகிறது.  






விக்ரோலியில் மீட்புப் பணியை மேற்கொண்டு வரும் தேசியப் பேரழிவு மீட்புப் படை அதிகாரிகள் இதுகுறித்து கூறுகையில்,“ விக்ரோலியில்  நிலச்சரிவு காரணமாக மலை அடிவாரத்தில் இருந்த 15-20 குடிசைகள் மண்ணில் புதைந்தது. இன்னும், இடிபாடுகளில் 15க்கும் மேற்பட்டவர்கள் சிக்கியிருக்கலாம். மீட்புப்பணிகள் முடிக்கிவிடப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.  


தொடர்மழை காரணமாக ரயில்வே தடங்களில் நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக, மேற்கு மற்றும் மத்திய ரயில்வே நிலையங்களில் புறநகர் ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 


 






கடந்த வெள்ளிக்கிழமை மும்பை நகரத்தின் மத்திய மற்றும் மேற்கு பகுதிகளில் மிகக் கனமழை பெய்துள்ளது. கிட்டத்தட்ட 4.5 மணி நேரத்தில் 253 மிமீ மலையுடன், மணிக்கு 60-70 கிமீ வேகத்தில் காற்று வீசியுள்ளது. இது,கடந்த 10 ஆண்டுகளில் இரண்டாவது அதிகபட்ச ஒருநாள் மழை அளவாகும். இதற்கு, முன்னதாக கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி 375.2 மிமீ மழை பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.         


மும்பையிலும் அதை ஒட்டியுள்ள கொங்கன் கடற்கரைப் பகுதியிலும் வீசக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கனமழையும் நீடிக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்தது.  


மேலும், வாசிக்க: 


Weather Forecast Today | தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!