புதுச்சேரி மேட்டுப்பாளையம் அருகே உள்ள சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் ஜீவா (25). இவர் நேற்று முன்தினம் விடுமுறை தினம் என்பதால் அவரது தெருவில் வசிக்கக்கூடிய நண்பர்களுடன் நோணாங்குப்பம் சுண்ணாம்பாறுக்கு  சென்றுள்ளார். அங்கு நண்பர்களுடன் சேர்ந்து குளிக்கும் பொழுது சற்று ஆழமான பகுதிக்கு ஜீவா சென்ற ஜீவா சேற்றில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் ஜீவாவை நீண்ட நேரமாக காப்பாற்ற முயற்சி செய்தும் முடியவில்லை.



Kerala Minister Meets EV Velu: முதல்வர் ஸ்டாலின் எங்களுக்கு Help பண்ணுவாரு! -கேரள அமைச்சர்


இருபினும் ஜீவாவின் நண்பர்கள் நீண்ட நேரம் ஜீவாவை தேடியுள்ளனர் கண்டுபிடிக்க முடியாத காரணத்தால், அருகில் இருந்தவர்களிடம்  தெரிவித்தனர். இது குறித்து தவளக்குப்பம் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிபடையியல் உடனே போலீசார் அங்கு விரைந்து சென்ற ஜீவாவின் உடலை தேடினர். இதற்கிடையே மாலையில் இருள் சூழ்ந்ததால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.  இந்த நிலையில் ஜீவாவின் உடன் நேற்று காலை ஆற்றங் கரையில் ஒதுங்கியது. இது பற்றி அறிந்த தவளக்குப்பம் காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.  



Udhayanidhi Stalin Press Meet: பாசிச அரசே!பாசிச அரசே!போராட்ட களத்தில் முழங்கிய உதயநிதி


இதற்கிடையே ஜீவா ஆற்றில் மூழ்கிய செய்தி அவரது தாயார் முத்து லட்சுமிக்கு (50) தெரியவந்தது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் மயங்கி விழுந்தார். அவர் ஏற்கனவே இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி நேற்று காலை முத்துலட்சுமி பரிதாபமாக இறந்தார்.




 


இது குறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


 


Annamalai pressmeet : வளைகாப்புதான் முக்கியமா? பிடிஆருக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி


PTR Palanivel Thiagarajan Comment: மாட்டு மூத்திரம் குடிப்பவங்களே! மாட்டுச் சாண மூளையா? கொந்தளித்த PTR