- நீட் தேர்வுக்கு எதிராக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன்குழு அறிக்கையை வெளியிட்டது தமிழக அரசு
- நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு தமிழக அரசே தனி சட்டத்தை இயற்றி குடியரசுத்தலைவர் ஒப்புதல் பெற்று விலக்கு பெற பரிந்துரை
- நீட் தேர்வு ஏழை, கிராமப்புற மாணவர்களுக்கு எதிரான பாரபட்சமான தேர்வு முறை – நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கை
- ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 54 ஆயிரத்து 45 வேட்புமனுக்கள் தாக்கல்
- 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கு நேற்று ஒரே நாளில் 34 ஆயிரம் பேர் வரை வேட்புமனுத் தாக்கல்
- ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நாளையுடன் நிறைவு
- உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
- அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி வரும் 24-ந் தேதி நேரில் சந்திப்பு
- தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டோரில் 1,623 நேற்று ஒரே நாளில் குணம் அடைந்தனர்
- தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 23 பேர் நேற்று உயிரிழப்பு
- 5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் படிப்பில் சேர்ந்தவர்களின் கல்வி, விடுதி கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
- அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாட்டில் கிராமசபை கூட்டம் நடத்த அனுமதி – தமிழக அரசு
- தமிழ்நாட்டிற்கு வாரந்தோறும் கூடுதலாக 50 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்க வேண்டும் – பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
- அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி நியமனத்தில் தலையிட முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஒருநாள் கூட கூடுதல் கால அவகாசம் வழங்க முடியாது – உச்சநீதிமன்றம் உத்தரவு
- தமிழ்நாட்டில் மேலும் 1,661 பேருக்கு புதியதாக கொரோனா
- சென்னையில் நேற்று புதியதாக 206 பேருக்கு கொரோனா
- புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு திருப்பதியில் தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி தரிசனம்
- புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் பதவி யாருக்கு? ஆளுங்கட்சியான என். ஆர். காங்கிரஸ் தீவிர ஆலோசனை
- இந்தியா – நேபாள ராணுவ வீரர்களின் கூட்டுப்பயிற்சி – உத்தரகாண்டில் தொடங்கியது
- அக்டோபர் மாதம் முதல் உபரியாக உள்ள தடுப்பூசிகள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் – மத்திய அரசு
- கேரளாவில் 90 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – 5 மாவட்டங்களில் 100 சதவீதம் தடுப்பூசி
- ஐ.பி.எல். போட்டித்தொடரில் பெங்களூர் அணியை கொல்கத்தா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது
TODAY HEADLINES : நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கை...! உள்ளாட்சித் தேர்தலுக்கு 54 ஆயிரம் வேட்புமனுக்கள்...! - இன்றைய தலைப்புச் செய்திகள்
சுகுமாறன்
Updated at:
21 Sep 2021 07:26 AM (IST)
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய செய்திகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
ஏபிபி நாடு தலைப்புச் செய்திகள்
NEXT
PREV
Published at:
21 Sep 2021 07:25 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -