ராஜஸ்தான் மாநிலம், ஆல்வார், மலகேடா பகுதியில் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஒருவரை அப்பகுதியில் வசிக்கும் சுன்னா எனும் 60 வயது துறவி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.


கோயிலுக்கு அழைத்துச் சென்று வன்புணர்வு முயற்சி


மலகேடா பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை அணுகிய துறவி சுன்னா, அச்சிறுமியிடம் முதலில் பணம் தந்து அவரை அங்கிருந்த கோயிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். தொடர்ந்து அவரை தனிமையில் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.


மேலும் படிக்க: பெண் குழந்தை பிறந்ததற்கு மகிழ்ச்சியுடன் ஓடிவந்த புது டாடி... போக்சோ சட்டத்தில் தூக்கிய போலீஸ்!


இந்நிலையில், சிறுமி கத்தி அழத் தொடங்கியதும் அவரது குரல் கேட்ட அப்பகுதி கிராமவாசிகள் ஓடி வந்து அவரைக் காப்பாற்றியுள்ளனர்.


சரமாரியாகத் தாக்கிய கிராமவாசிகள்


தொடர்ந்து கிராமவாசிகள் துறவியை சரமாரியாகத் தாக்கி மலகேடா காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில், துறவியின் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டதுடன், சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்திய பின் துறவியை சிறையில் அடைத்தனர்.


 






இந்நிலையில், துறவியின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து அவருக்கு தண்டனைப் பெற்றுத் தர வேண்டும் எனக்கோரி, காவல் நிலையத்தின் முன் அப்பகுதி கிராமவாசிகள் போராட்டம் நடத்தினர். 


மேலும் படிக்க: பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற மருத்துவர் - தற்கொலைக்கு முயன்ற செவிலியர்! தூத்துக்குடியில் பரபரப்பு


Abp nadu impact: தந்தூரியால் உயிரிழந்த மாணவன்? திடீரென களமிறங்கிய அதிகாரிகள்! கிலோ கணக்கில் சிக்கிய சிக்கன்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண