இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 ரக போர் விமானம் ராஜஸ்தான் மாவட்டம், பர்மர் மாவட்டத்தில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளான நிலையில், விமானத்தை இயக்கிய 2 விமானிகள் உயிரிழந்தனர்


இரவு சுமார் 9 மணியளவில் போர் விமானம் திடீரென பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரியத் தொடங்கிய நிலையில், விமானம் முழுவதும் எரிந்து நாசமானது.


 






இந்நிலையில் விமான விபத்து குறித்து பேசிய பார்மர் மாவட்ட ஆட்சியர் லோக் பாண்டு, பேட்டூ தாலுகாவில் உள்ள பிம்டா கிராமம் அருகே இந்த விமானம் விழுந்து நொறுங்கியதாக தெரிவித்துள்ளார்.


 






இந்த விமான விபத்து குறித்து முன்னதாக விமானப்படைத் தளபதியிடம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார்.


முன்னதாக இதேபோல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ராஜஸ்தானின் ஜெய்சால்மர் பகுதியில் மிக்-21 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானதில் இந்திய விமானப்படையின் விமானி விங் கமாண்டர் ஹர்ஷித் சின்ஹா ​​உயிரிழந்தார்.


2021ஆம் ஆண்டு மட்டும் மொத்தம் ஐந்து MiG-21 ரக விமானங்கள் இந்தியாவில் விபத்துக்குள்ளாகியுள்ளன. 
இந்த விபத்துகளில் மூன்று விமானிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க: Chess Olympiad 2022: செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு தம்பி மாஸ்காட்டை தேர்ந்தெடுத்தது ஏன்? : விளக்கமளித்த முதலமைச்சர் ஸ்டாலின்


MK Stalin Speech: செஸ் விளையாட்டின் தலைநகரமாக விளங்குகிறது சென்னை..- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்


ஆளுங்கட்சியினர் அமர்ந்திருந்த இடத்திற்கே சென்ற சோனியா காந்தி.. குறுக்கிட்ட ஸ்மிருதி இரானி.. நாடாளுமன்றத்தில் பரபரப்பு


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண