தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 21ஆம் தேதி மேகதாது திட்டம் தொடர்பாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து இது தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கருத்து தெரிவித்திருந்தார். அதில், “மேகதாது திட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றியது சட்டவிரோத முடிவு. இது மிகவும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு அரசின் முடிவு எதுவாக இருந்தாலும்  மேகதாது திட்டத்தை செயல்படுத்துவதில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. மற்றொரு மாநில உரிமையில் தலையிடுவதன் மூலம் மக்களுக்கு எதிரான தீர்மானத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் மேகதாது விவகாரத்தில் தமிழக சட்டப்பேரவை தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார். இந்த தீர்மானத்தை கர்நாடக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கொண்டு வந்தார். அதற்கு அங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு அளித்தனர். இதைத் தொடர்ந்து அந்த தீர்மானம் ஒரு மனதாக இயற்றப்பட்டது.


 






2022 - 2023 ஆம் ஆண்டிற்கான கர்நாடக மாநில நிதிநிலை அறிக்கை  மார்ச் 4 ம் தேதி கர்நாடக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த நிதிநிலை அறிக்கையில், பக்கம் 23, பத்தி 75-ன ல், மத்திய அரசிடமிருந்து உரிய அனுமதியை பெற்று மேகதாது அணை மற்றும் பெங்களூரு குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.  இதற்கு தமிழகத்தில் அரசியல் கட்சியினர், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து, கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர்.


முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டின் விவசாயிகள் மற்றும் விவசாயங்கள் சேர்ந்து போராட்டம் நடத்தினர். அத்துடன் இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண