உயிரின் மதிப்பு தெரியாவதற்களும், வாழ்வின் அர்த்தம் புரியாதவர்களும், எதிர் வரும் அற்ப பிரச்னைகளை பார்த்து நடுங்கி தற்கொலை செய்து கொள்கின்றனர். நாம் இறப்பது நம்மோடு முடியாமல் நம்மை சுற்றி உள்ளவர்களையும் அது பெரும் சிக்கலுக்கு உள்ளாக்கும் என்பது அவர்களுக்கு புரியவில்லை. ஆனால் இதில் சிலருக்கு அதிஷ்டவசமாக இராண்டாவது வாய்ப்பு வழங்கப்படும். அந்த வாய்ப்பானது முன்பின் தெரியாத யாரோ ஒருவரால் அந்த நபருக்கு வந்து சேரும்.

Continues below advertisement


அதற்கு சான்றாக தற்போது ஒரு வீடியோ வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் ரயிலில் விழுந்து தற்கொலை செய்ய முயல, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் ரயில்வே காவலர் ஒருவர் பாய்ந்து அவரை காப்பாற்றி இருக்கிறார். இந்த சம்பவம் தானே மாவட்டம், விடல்வாடி ரயில் நிலையத்தில், நேற்று மதியம் 2.30 மணியளவில் நடந்துள்ளது. 18 வயது இளைஞர் ஒருவர் ரயில்வே ப்ளாட் ஃபார்மில் சக பயணி போல நிற்கிறார்.


 






அதே ப்ளாட் ஃபாமில், 35 வயது ரயில்வே காவலரும் இன்னும் சில பயணிகளும் நின்று கொண்டிருந்தனர். அப்போது திடிரென ப்ளாட்ஃபார்மில் நின்று கொண்டிருந்தா அந்த இளைஞர் திடிரென தண்டவாளத்தில் குதித்து விட்டார். இதைப்பார்த்த அந்த காவல்ர் உடனே அவரை காப்பாற்ற ஓடி செல்கிறார். அதற்குள் ரயில் கிட்டத்தட்ட இளைஞரை நெருங்க, சிறிது நேரம் யோசித்த அந்த காவலர் தன் உயிரையும் பொருட்படுத்தாமல், தண்டவாளத்தில் குதித்து அவரை காப்பாற்றினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  


 


மேலும் படிக்க: 18 நாளில் முடிந்த 100வது நாள் படம்.. சிகரெட் கேப்ல எல்லாம் யோசிப்பார்.. மணிவண்ணன் சீக்ரெட்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண