மேகாலயாவில் காலை 9 மணி நிலவரப்படி தேசிய மக்கள் கட்சி 24 இடங்கள் பெற்று முன்னிலை வகிக்கிறது. மீண்டும் தேசிய மக்கள் கட்சி ஆட்சி அமைக்கும் என கூறப்பட்டுள்ளது. 


மேகாலயா மற்றும் நாகலாந்து சட்டமன்றங்களில் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், இருமாநிலங்களுக்கும் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 


மேகாலயா தேர்தல்:


மேகாலயாவில் மொத்தமுள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளில் 59 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 77.9% வாக்கு பதிவாகியுள்ளது. மேகாலயாவில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 30 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் தேசிய மக்கள் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளும் ஆட்சியை பிடிக்க தீவிரம் கட்டி வருகின்றன.


காலை 9 மணி நிலவரப்படி தேசிய மக்கள் கட்சி 24 இடங்கள் பிடித்து முன்னிலையில் உள்ளது. அதேபோல் பா.ஜ.க 12 இடங்கள் பெற்றுள்ளது.


ஏற்கனவே வெளியிட்ட கருத்துக்கணிப்புகள், மேகாலயாவில் தொங்கு சட்டசபை அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏற்றவாறு மேகாலயா முதலமைச்சர் கான்ராட் கே சங்மா  கூட்டணி ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆளும் தேசிய மக்கள் கட்சி முன்னிலை வகிக்கிறது. பா.ஜ.க பெறும் பின்னடைவு சந்தித்துள்ளது.


நடந்து முடிந்த தேர்தலில் 21 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களித்தனர். இவர்கள் வாக்களிப்பதற்காக மொத்தம் 3,419 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டது. மேகாலயாவில் உள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளில் சோகியாங் தொகுதி ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான லிங்டோவின் திடீர் மரணத்தால் அந்த தொகுதிக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. மூன்று மாநில தேர்தலில் 19 ஆயிரம் ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் பாதுகாப்பு பணிகளுக்காக மாநில போலீசாருடன் இணைந்து, 119 கம்பெனி மத்திய ஆயுதப்படையினரும் களத்தில் உள்ளனர். 


Assembly Election Results 2023 LIVE: 3 மாநில சட்டப்பேரவை தேர்தல்: மேகாலயாவில் பாஜக பின்னடைவு; என்.பி.பி முன்னிலை


Erode East By Election Result LIVE: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: முதல் சுற்றில் காங்கிரஸ் முன்னிலை...தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்...