நியூஸ்பேப்பரில் வந்த ஒரு திருமண விருப்பம் தொடர்பான விளம்பரம் ஐடி ஊழியர்களின் எதிர்காலத்தையே மீம் கண்டெண்ட் உள்ளது. 


திருமண விருப்பங்கள்


இந்தியா அரேஞ்ச்டு மேரேஜ் என்று கூறப்படும் பெற்றோர்கள் பார்த்து சேர்த்து செய்து வைக்கும் திருமணங்கள் அதிகம். அதற்கு பெண் அல்லது மாப்பிள்ளை தேடுவது என்பதே வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு ஒரு வித்யாசமான நடைமுறையாக தெரியும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மேட்ரிமோனி சைட்கள் என பல்வேறு இடங்களில் தங்களை பதிவு செய்துவிட்டு வரனிற்காக காத்திருப்பார்கள். அதில் விருப்பங்கள் என்னும் ஆப்ஷன் இருக்கும், அதில் திருமண வீட்டார் தங்கள் சகல ஆசைகளையும் எழுதி ஒரு கனவு பெண்ணை உருவாக்கி வைத்திருப்பார்கள், சில சமயங்களில் அவை வேடிக்கையாக இருப்பதும் உண்டு. அத்தகைய ஒரு வித்தியாசமான திருமண விளம்பரம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 










விளம்பரத்தில் என்ன பிரச்சனை?


24 வயதான பணக்கார குடும்ப வணிக பின்னணியைச் சேர்ந்த அழகான எம்பிஏ பெண் ஒரு மணமகனைத் தேடும் செய்தித்தாள் விளம்பரம் ஒன்றில் அவர்களது எதிர்பார்புகளில் “இதே சாதியில் உள்ள ஐஏஎஸ்/ஐபிஎஸ், வேலை செய்யும் மருத்துவர் (பிஜி), தொழிலதிபர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று எழுதப்பட்டு இருந்தது". மேட்ரிமோனிகளில் சாதி வாழ்வது வழக்கம்தான் என்றாலும் இந்த விளம்பரத்தை ஸ்பெஷல் ஆக்குவது அதற்கு கீழ் இருந்த பின் குறிப்புதான். அதில், “மென்பொருள் பொறியாளர்கள் தயவுசெய்து தொடர்புகொள்ள வேண்டாம்” என்று எழுதியிருந்தது.


தொடர்புடைய செய்திகள்: பத்து ரூபாய் நாணயத்தை செல்லாது என சொன்னால் தண்டணையா? - RBI சொல்வது என்ன?


ட்விட்டர் பதிவு வைரல்


ஐடி ஊழியர்களை பார்த்து மற்ற துறைகளில் இருப்பவர்கள் பொறாமை படுவதை நாம் ட்விட்டரில் காண முடியும். ஆனால் இது போன்ற பதிவுகள் அவர்களையே பயமுறுத்தியுள்ளது. இந்த விளம்பரத்தின் புகைப்படத்தை ட்விட்டரில் மும்பையை தளமாகக் கொண்ட நிதி ஆலோசனை நிறுவனமான ஹீலியோஸ் கேப்பிட்டலின் நிறுவனர் சமீர் அரோரா (@iamsamirarora) பகிர்ந்து கொண்டார். இதுவரை அவரது ட்வீட் செப்டம்பர் 16 அன்று வெளியிடப்பட்டதிலிருந்து 4,000 க்கும் மேற்பட்ட லைக்குகளை சேகரித்துள்ளது. அவருடைய பதிவில், "ஐடி-யின் எதிர்காலம் அவ்வளவு அழகாகத் தெரியவில்லை," என்று அவர் எழுதியிருந்தார்.










இது முதல்முறை அல்ல


இந்த பதிவில் ஒரு ட்விட்டர் பயனர் கமெண்ட் செய்திருந்தது பலரை கவர்ந்தது, “துரதிர்ஷ்டவசமாக அல்லது அதிர்ஷ்டவசமாக இந்த மென்பொருள் பொறியாளர்கள் ஒரு ஐஏஎஸ்/ஐ.பி.எஸ்ஸை விட அதிகமாக சம்பாதிக்கிறார்கள், அவர்கள் முதலாளியை விரும்பவில்லை என்றால் அவர்களின் வேலையை எளிதில் மாற்ற முடியும்” என்று எழுதி இருந்தார். ஒரு திருமண விளம்பரம் அதன் விருப்பங்களுகாக வைரலாவது இது முதல் முறை அல்ல. கேரளாவில் ஒரு அம்மா தனது மகனுக்கு இரண்டாவது திருமணம் செய்ய ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் வாய்ஸ்நோட் செய்திருந்தார். அதில், "அப்பா அம்மா இல்லாத அனாதை பெண்ணாக வேண்டும், 20 முதல் 25 வயதிற்குள் வேண்டும், அதற்கு மேல் சென்றால் நாம் சொல்வதை கேட்கமாட்டார்", என்று பேசிய அவர் கடைசியாக, "ஃப்ரெஷ் பெண்" வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது வைரலானது குறிப்பிடத்தக்கது. அதோடு ஒரு ராணுவ வீரருக்கு பெண் பார்க்கையில் ராணுவத்தையும் விளையாட்டுத் துறையையும் மேம்படுத்தும் பெண் வேண்டும் என்று குறிப்பிடப்பட்ட விளம்பரம் 2020 ஆம் ஆண்டு வைரலாகி இருந்தது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண