ஆந்திர பிரதேச மாநிலத்தின் திருப்பதியில் உள்ள சுங்கச் சாவடி ஒன்றில் ஃபாஸ்டேக் ( FASTag) - சரியாக செயல்படாததால் தமிழகத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர்களுக்கும் சுங்கச் சாவடி அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
சட்டக் கல்லூரி மாணவர்கள் தேர்வு முடித்துவிட்டு தமிழ்நாடு திரும்பிக்கொண்டிருந்தபோது, சுங்கச் சாவடியில் அவர்கள் வாகனங்களில் ஒன்றில் ஃபாஸ்ட் டேக் செயலி சரியாக செயல்படாமல் இருந்தும், கட்டணம் செலுத்தாமல் சுங்கச் சாவடியை விட்டு செல்லக் கூடாது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சட்டக் கல்லூரி மாணவர்களின் ஒரு காரில் ஃபாஸ்ட் டேக் க்யூஆர் கோர்ட் சரியாக செயல்படவில்லை. எனவே, சுங்கச் சாவடியில் உள்ள அதிகாரிகள், அந்த காரை ஓரமாக நிறுத்துமாறும், செல்பவர்களுக்கு வழிவிடுமாறு கூறியுள்ளனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது செயல்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதால், மாணவர்கள் ஹெல்மெட்டால் சுங்கச் சாவடி அதிகாரியை தாக்கியுள்ளார். இந்த பிரச்சனையால், அங்கு சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சனையை சமாளிக்க திருப்பதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இருவருக்கும் இடையே என்ன நடந்தது என்று விசாரணை செய்தனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் வாசிக்க..
ஓட்டலில் பணியாளர் முதல் பிரதமர் வரை.. ரிஷி சுனக் கடந்து வந்த பாதை...!
Whatsapp : ஐபோன் வாடிக்கையாளரா நீங்க ! இனி இந்த மாடல் ஐபோன்களில் எல்லாம் WhatsApp இயங்காது !