ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் (Naveen Patnaik) ட்விட்டரில் தொடர்ந்து அம்மாநிலம் தொடர்பாக பல்வேறு விஷயங்களை பதிவிட்டு வருகிறார். அவரது சமீபத்திய ட்வீட்டில், ஓடிசாவில் உள்ள இயற்கை அழகை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்ற வகையில்  முடிவு செய்து ஏரி ஒன்றினை பற்றி கருத்து தெரிவித்துள்ளார். அவர் அங்குள்ள ஒரு அழகான ஏரியின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் அதை "இந்தியாவின் சிறந்த ரகசியம் என்று அழைத்தார். ”


நவீன் பட்னாயக் டிவீட்:


“சிலிகா ஏரியானது ஒடிசாவின் கலாச்சாரம் மற்றும் இலக்கியத்தில் ஒருங்கிணைந்துள்ளது. இது இயற்கை ஆர்வலர்களின் சொர்க்கம். இந்த இடத்தை பார்வையிட வருவோருக்கு ஏரி  திருவிழாவை நடத்துகிறது. இந்த குளிர்காலத்தில் இயற்கையின் ரீங்காரத்துடன் நேரத்தை செலவிடுவோம், சிலிகா ஏரியின் இயல்பை ரசிப்போம். போற்றுவோம். சிலிகா ஏரியால் நம் வாழ்க்கை வளர்க்கப்படுகிறது. இயற்கையின் மகிமையை கொண்டாடுவோம். என்று குறிப்பிட்டு #IndiasBestKeptSecret,” என்ற ஹேஷ்டேக் உடன் பதிவிட்டிருந்தார்.


உங்களை வியப்பில் ஆழ்த்தும் அழகிய சிலிகா ஏரியின் படங்களைப் பாருங்கள்:







அவர் ஒரு நாள் முன்பு இதை வெளியிட்டார். பகிரப்பட்டதிலிருந்து, 1,500 க்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது.  மேலும் இதை ரீஷேர் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த ட்வீட் மக்களிடம் இருந்து பல கருத்துக்களையும் பெற்றுள்ளது.


"அற்புதம்," என்று ஒரு ட்விட்டர் பயனர் குறிப்பிட்டுள்ளார். "அழகு " என்று மற்றொருவர் பகிர்ந்துள்ளார்.  "நம் நாட்டின் அழகான ஏரி," என ஒருவர் தன் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.  "ஓஹ் மை குட்... அற்புதம்," என்று டிவிட்டரில் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.