மராத்தி, பெங்காலி, பாலி, பிராகிருதம், அசாமிஸ் என மேலும் 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே 6 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.


தற்போது மேலும் 6 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பதன் மூலம் செம்மொழி அந்தஸ்து பெற்ற மொழிகளின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஒடியா ஆகிய மொழிகளுக்கு ஏற்கனவே செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. 


5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து:


இந்தியாவில் கடந்த 2004ஆம் ஆண்டு, முதல்முறையாக தமிழுக்குதான் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. கடைசியாக, கடந்த 2014ஆம் ஆண்டு, ஒடியாவுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. தங்களின் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


மராத்திய மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கோரும் வகையில் கடந்த 2014ஆம் ஆண்டு, அப்போதைய மகாராஷ்டிர முதலமைச்சர் பிருத்விராஜ் சவான் மொழி வல்லுனர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைத்திருந்தார்.


 






மராத்தியம், செம்மொழியாக அங்கீகரிக்கப்படுவதற்கான அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்துள்ளதாகவும், இந்த அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் குழு தெரிவித்திருந்தது. கடந்த மாத இறுதியில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், மராத்திக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் நரேந்திர மோடி புறக்கணிப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.


மகாராஷ்டிரா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மராத்திய மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது. 


இதையும் படிக்க: "பிராமின்தான்.. ஆனா பீப் சாப்பிட்டாரு" சாவர்க்கர் குறித்து புயலை கிளப்பிய கர்நாடக அமைச்சர்!