பருவநிலை மாற்றத்திற்கு முக்கியமான காரணமாக கருதப்படுவது மரங்களை அழிப்பது தான். ஏனென்றால் மரங்களை அழிப்பதால் அவற்றின் மூலம் மறு சுழற்ச்சி செய்யப்படும் கார்பன் டை ஆக்ஸைடு வாயு அளவு குறைகிறது. இதன் காரணம் வலி மண்டத்தில் இருக்கும் கார்பன் அளவு அதிகரித்து பூமி வெப்பம் மயமாதல் மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவை ஏற்படுகிறது. அத்துடன் பருவநிலை மாற்றத்தையும் இது உண்டாக்கும் தன்மை கொண்டுள்ளது. ஆகவே மரங்களை பாதுகாப்பது மற்றும் அவற்றை வெட்டினால் வேறு இடத்தில் மீண்டும் நடுவது போன்றவற்றில் அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும் என்று பலர் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் வெட்டப்பட்ட மரத்தை மூங்கிலை வைத்து தூக்கி செல்லும் படம் ட்விட்டரில் வைரலாக தொடங்கியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் வளர்ச்சி திட்டத்திற்காக வெட்டப்பட்ட மரம் ஒன்றை எந்தவித இயந்திரமும் பயன்படுத்தாமல் சில இளைஞர்கள் மூங்கில் உதவியுடன் தூக்கி செல்கின்றனர். இந்தப் படத்தை துணை ஆட்சியர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் படத்துடன், "ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம்" எனவும் பதிவிட்டுள்ளார்.
ஜேசிபி வண்டி மற்றும் வேறு எந்தவிதமான இயந்திரமும் இங்கு பயன்படுத்தப்படாததால் பலரும் இளைஞர்களின் செயலை பாராட்டி வருகின்றனர். குறிப்பாக ஒருவர் தமிழில், "சமுதாய நலன் காக்கும் உணர்வும், ஆற்றலும் மிக்க பாராட்டிற்குறிய இளைஞர்கள். எதிர்கால சமுதாயத்தின் பாதுகாப்பிற்கு அடித்தளம் அமைத்த வீரர்கள்" எனப் பாராட்டி பதிவு செய்துள்ளார். அத்துடன் மேலும் சிலர் இந்த சிறுவரகள் தான் உண்மையான க்ரீன் வாரியர்ஸ் என்று பதிவிட்டு வருகின்றனர்.
இவ்வாறு பலரும் பாராட்டி வருகின்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ‛போராளிகள் விதைக்கப்படுகிறார்கள் புதைக்கப்படுவதில்லை’ ஸ்டேன் சுவாமி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!