நாடுமுழுவதும் இன்று இந்தியா தனது 76வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது. பவள விழா கண்ட இந்நாளில் இந்தியா முழுவதும் தங்கள் வீடுகளில் கொடியினை ஏற்றி மிக சிறப்பாக விடுதலை போராட்ட வீரர்களை நினைவு கூர்ந்து வருகின்றனர். 


இந்த 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடுமுழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பல்வேறு இடங்களில் அவ்வபோது வெடிகுண்டு மிர்ட்டல் விடப்பட்டு, அது பொய் என்றும் நிரூபிக்கப்பட்டது. இந்த நிலையில், மங்களூரில் நேற்று வெடிகுண்டு பீதி காரணமாக ஒரு விமானம் நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 




மங்களூருவில் இருந்து மும்பை செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணித்த பயணி ஒருவர், ஒரு இளைஞர் அவருக்கு தெரிந்த பெண்ணிடம் மொபைலில் சேட் செய்து வந்துள்ளார். அப்போது விமானத்தில் இருந்த ஆணுக்கு அந்த பெண் தனது செல்போனில் இருந்து நீ ஒரு வெடிகுண்டு என்று வாட்சப்பில் அனுப்பிய மெசேஜ் அருகில் இருந்த பெண் பயணி தற்செயலாகப் படித்து தவறாகப் புரிந்து கொண்டு அதிகாரிகளுக்கு புகார் அளித்தார்.


இதையடுத்து உடனடியாக, விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டு, விமானம் முழுவதும் ஏதேனும் நாசவேலை நடந்ததா என சோதிக்கப்பட்டது. தொடர்ந்து அவரிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், விமானத்தில் இருந்த ஆண் பயணிக்கு, பெண் ஒருவர் நீ ஒரு வெடிகுண்டு என்று விளையாட்டாக சேட் செய்துள்ளார். இந்த சேட் அனைத்தையும் அருகிலிருந்து எதார்த்தமாக பார்த்து கொண்டிருந்த பெண் பயணி, வெடிகுண்டு என்றதும் பயத்தில் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில், புறப்பட இருந்த விமானம் நிறுத்தப்பட்டு அனைத்து பயணிகளிடம் சோதனை செய்யப்பட்டது. இதனால் 6 மணி நேரம் தாமதத்திற்குப் பிறகு விமானம் மும்பை புறப்பட்டுச் சென்றது.


மேலும் படிக்க : விராட் கோலி அறிமுகப்படுத்திய புதிய மசாஜ் கேட்ஜெட் ! என்னென்ன வசதிகள் இருக்கு ? விலை எவ்வளவு?


இந்த சம்பவம் குறித்து பதிலளித்த விமான நிலைய ஆணையம், "அதிகாரப்பூர்வ விமான நிலையம் என்பதால், இந்த சம்பவம் குறித்து நாங்கள் எதுவும் வெளியில் கூறவில்லை. தற்போது அனைத்து விவரங்களுக்கு உள்ளூர் சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளோம்” என்று தெரிவித்தனர்.


மாநகர போலீஸ் கமிஷனர் என்.சஷி குமார் கூறுகையில், "இரண்டு நண்பர்கள் வாட்ஸ்அப்பில் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். மற்றொரு பெண் அந்த சேட்டிங்கை பார்த்து தவறாக புரிந்து கொண்டார். இதனால் அங்கு சில சிக்கல்கள் ஏற்பட்டு மங்களூருவில் இருந்து மும்பைக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் நிறுத்தப்பட்டது” என்று தெரிவித்தார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண