சமீப காலமாகவே இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது சமூக வலைத்தள பக்கத்தில் புதிய புதிய பொருட்களுக்கான விளம்பரங்களை செய்து வருகிறார் . அந்த வகையில் சமீபத்தில் அவர் Hyperice Hypervolt Go 2 என்னும் புதிய  மசாஜருக்கு தனது ஆதரவை அளித்துள்ளார். இது கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் இருக்கும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

Continues below advertisement

வசதிகள் :

Continues below advertisement

இந்த Hyperice Hypervolt Go 2  ஆனது முற்றிலுமாக விளையாட்டு வீரர்கள் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து மீள விரும்புபவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.தினமும் 5 நிமிடங்கள் இந்த மசாஜர் கேட்ஜெட்டை பயன்படுத்தினால் உடலின் இயக்க வரம்பு அதாவது  range of motion அதிகரிக்கும் என நிறுவனம் தெரிவிக்கிறது. மேலும் மன அழுத்தம் , உடல் சோர்வு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு இது தீர்வாக அமையும் என கூறப்படுகிறது. முன்னதாக ஹைப்பர்வோல்ட் கோ அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது அதன் அடுத்த பதிப்பாகத்தான் ஹைப்பர்வோல்ட் கோ 2 அறிமுகமாகியுள்ளது. பார்ப்பதற்கு வாட்டர் கன் எனப்படும் துப்பாக்கி வடிவத்தில் இருக்கும் இந்த கருவியை வலி அல்லது மசாஜ் தேவைப்படும் இடத்தில்   வைத்து  மசாஜ் செய்தால் தசைகள் தளர்வு பெறும் என்றும் உடனடியான தீர்வு கிடைக்கும்  என்கிறது நிறுவனம். 

விராட் கோலி கருத்து :

பிராண்ட் அம்பாசிட்டர் விராட் கோலி இது குறித்து கூறும் பொழுது "“நீங்கள் உடற்பயிற்சி ஆர்வலராக இருந்தாலும், விளையாட்டு வீரராக இருந்தாலும் அல்லது ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நாடுபவராக இருந்தாலும்,  recovery ஒருவரின் ஒட்டுமொத்த நல்வாழ்வின் ஒருங்கிணைந்த அம்சம் என்று நான் எப்போதும் நம்புகிறேன். ஹைபரைஸ்  இந்த புதுமைகளில் முன்னணியில் உள்ளது மற்றும் அனைத்து விஷயங்களையும் மீட்டெடுப்பதற்கான எனது பிராண்டாக மாறியுள்ளது. இந்தியாவில் ஹைப்பர்வோல்ட் கோ 2 அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், சாகச பயணத்தின்போது நீங்கள் எளிமையாக  recovery ஆகலாம் நீங்கள் விரும்புவதைச் செய்யலாம் “ என்றார்.

 

விலை மற்றும் பிற விவரங்கள் :

Hypervolt Go 2 ஆனது ஆர்க்டிக்-சாம்பல் நிறத்தில் வருகிறது.ஹைப்பர்வோல்ட் கோ 2 ஒற்றை மாறுபாட்டில் மட்டும்தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை  ரூ.18,999 . ஹைப்பர்வோல்ட் கோ 2 ஐ hyperice.in, Amazon மற்றும் Crome உள்ளிட்ட தளங்களில் ஆன்லைன் மூலமாகவும் , ஆஃப்லைன் மூலமாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.