புனே ஹிஞ்சேவாடியில் உள்ள பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் 22 வயது பெண்ணை, 32 வயது சக ஊழியர் தனது வீட்டில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. 


இசம்பவம் ஜூன் 6, 10 ஆகிய தேதிகளில் அரங்கேறியுள்ளது. கடந்த ஜூன் 6ஆம் தேதி, அலுவலக பணியை முடிக்க வேண்டும் எனக் கூறி, பாதிக்கப்பட்டவரை வீட்டிற்கு அழைத்து, குளர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி உள்ளார்.


 


கொடுக்கப்பட்டது மயக்க மருந்து என தெரியாமல், அதை அருந்திய பாதிக்கப்பட்டவர் மயக்கமடைந்துள்ளார். பின்னர், அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இதை வீடியோவாக எடுத்தது மட்டுமில்லாமல், இதுகுறித்து வெளியே தெரிவித்தால் வீடியோ இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என மிரட்டியும் உள்ளார். 


மென்பொருள் பொறியாளராக பணிபுரியும் பாதிக்கப்பட்ட பெண், ஒரு மாதத்திற்கு முன்புதான் அந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். காவல்துறையினருக்கு அளித்த புகாரில், குற்றம் சாட்டப்பட்டவர் அலுவலக வேலைகளை முடிக்க அவரது வீட்டிற்கு வருமாறு பல முறை கூறியதாக தெரிவித்தார்.




ஜூன் 25ஆம் தேதி, குற்றம்சாட்டப்பட்டவர் மீண்டும் அவரை தனது குடியிருப்பிற்கு அழைத்தார். ஆனால், இந்த முறை போலீசில் புகார் செய்ய பாதிக்கப்பட்ட பெண் முடிவு செய்துள்ளார்.


முதல் தகவல் அறிக்கையில் பாதிக்கப்பட்ட பெண் இரண்டு முறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது மருத்துவ அறிக்கையும் இதை உறுதி செய்துள்ளது.


ஹிஞ்சேவாடி காவல் நிலையத்தில் மூத்த காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் முக்லிகர் இதுபற்றி பேசுகையில், "குற்றம்சாட்டப்பட்டவர் ஞாயிற்றுக்கிழமை காலை அவரது வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்" என்றார்.


விசாரணை அலுவலர் எஸ் போர்கர் கூறுகையில், "குற்றம் சாட்டப்பட்டவர் தனது மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் பாதிக்கப்பட்டவரை அழைப்பது வழக்கமாக கொண்டுள்ளார்" என்றார்.


குற்றம் சாட்டப்பட்டவர், அவரது மனைவி மற்றும் புகார்தாரர் உட்பட மூவரும் ஹிஞ்சேவாடியில் உள்ள ஒரே மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதையும் படிக்க: டிடிவி தினகரனோடு உறவு; குடும்பத்தை மட்டும் பார்க்கிறார் ஓபிஎஸ்: பரபரப்பை கிளப்பும் உதயகுமார்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண