அரசியல் களத்தில் தன் அதிரடி நடவடிக்கைகள், கருத்துகளால் என்றும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்கும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தற்போது தன் தனித்துவமான நடவடிக்கையால் கவனம் ஈர்த்துள்ளார்.


முன்னதாக மேற்கு வங்க மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான டார்ஜிலிங் சென்றுள்ள மம்தா, அங்கிருக்கும் மக்களுக்கு பானி பூரி வழங்கும் வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் ஆகி உள்ளது.


டார்ஜிலிங் சௌராஸ்தாவில் கோர்க்காலாந்து பிராந்திய நிர்வாகத்தின் (ஜிடிஏ) பதவியேற்பு விழாவில் பங்கேற்க மூன்று நாள் பயணமாகச் சென்றுள்ள மம்தா, அங்குள்ள மலைகளின் வளர்ச்சிக்கு மாநில அரசு அனைத்து ஆதரவையும் வழங்கும் என உறுதியளித்தார்.


 






இந்நிலையில் முன்னதாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் முதலமைச்சர் மம்தா பானி பூரி வழங்கும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.


 






இதேபோல் கடந்த மாதம் மேற்கு வங்கத்தின் அலிபுர்துவார் மாவட்டத்தில் நடைபெறும் பழங்குடியினர் திருமண நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி பழங்குடியினருடன் இணைந்து நடனம் ஆடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க: Nasa Webb Telescope : அறிவியலில் புதிய உச்சம்...பெருவெடிப்புக்கு பிறகு விண்மீன் மண்டலம் காட்சி அளித்தது எப்படி? முதல் புகைப்படத்தை வெளியிட்ட பைடன்


Shinzo Abe Japan PM : 'பிரச்சாரக் கூட்டத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஜப்பானிய முன்னாள் பிரதமர்' ஷின்சோ அபேயின் வாழ்வும் வரலாறும்..!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண