டபுள்யூ. டபுள்யூ. இ. எனப்படும் குத்துச்சண்டை போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பங்கேற்று விளையாடுபவர் தி கிரேட் காளி என அழைக்கப்படும் காளி. டோல்கேட் ஊழியர்களுடன் இவர் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


பஞ்சாபில் வசித்து வரும் காளி தனது நண்பர்களுடன் பானிபட்- ஜலந்தர் நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. காளி லூதியானா வழியாக கர்ணலுக்கு செனறு கொண்டிருந்தபோது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.




அந்த வீடியோவில், டோல்கேட் ஊழியர்கள் காளியிடம் தங்களது ஊழியர் ஒருவரை அறைந்ததாக குற்றம் சாட்டுகின்றனர். மேலும், காளியிடம் அவரது அதிகாரப்பூர்வ அடையாள அட்டையை காட்டுமாறும் கூறுகின்றனர். ஆனால், காளி தன்னிடம் அடையாள அட்டை இல்லை என்றும், தன்னை மிரட்டுகின்றனர் என்றும் வீடியோவில் பேசுவது தெளிவாக கேட்கிறது. மேலும், தங்களது சக ஊழியரை ஏன் தாக்கினீர்கள்? என்று மீண்டும் கேட்கின்றனர்.






அப்போது, அங்கிருந்த டோல்கேட் ஊழியர்கள் அவரை அடித்துவிடுவோம் என்றும், சண்டையை எல்லாம் அவர் மறந்துவிடுவார் என்றும் பேசுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. அப்போதும் காரின் உள்ளே இருந்த ஊழியர்கள் அங்கே இருந்த பேரிகார்டை அகற்றுமாறு கேட்டார். ஆனால், தொடர்ந்து அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் காளி காரில் இருந்து இறங்கினர்.


அதற்குள் சம்பவ இடத்திற்கு வந்த பஞ்சாப் போலீசாரிடம் காளி பேசினார். அப்போது, அவரது கையைப் பிடித்து இழுத்தார். அப்போது, அங்கே இருந்த டோல்கேட் ஊழியர் ஒருவர் காளியை தரக்குறைவாக பேசினார். ஆனால், காளி அங்கே இருந்த பேரிகார்டை அகற்றிவிட்டு காரை முன்னோக்கி போகச்சொன்னார். அதைத் தடுக்க வந்த டோல்கேட் ஊழியரை கையைப் பிடித்து இழுத்தார். பின்னர், காரின் உள்ளே ஏறிச்சென்றுவிட்டார்.




இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ள காளி, டோல்கேட் ஊழியர்களுடன் தான் போட்டோ எடுத்துக்கொள்ள ஒப்புக்கொள்ளாத காரணத்தால் அவர்கள் இதுபோன்று நடந்து கொண்டதாகவும், அவர்கள் பணிவாக கேட்டிருந்தால் நான் போட்டோ எடுக்க சம்மதித்திருப்பேன். ஆனால், அவர்கள் போட்டோ எடுக்க ஒத்துக்கொள்ளாவிட்டால் அனுமதிக்கமாட்டோம் என்று பேசினார்கள். பின்னரே, அவர்கள் என்னை மிரட்டி என்னிடம் தவறாக நடந்து கொண்டனர் என்று கூறியுள்ளார்.


இந்த விவகாரம் குறித்து எந்த தரப்பினரும் புகார் அளிக்காததால் இதுகுறித்து யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கடந்த பிப்ரவரி மாதம்தான் பா.ஜ.க.வில் காளி இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண