மகாராஷ்டிர சட்டபேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்திருந்த நிலையில், வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.
ஆளுநரின் உத்தரவை எதிர்த்து சிவசேனா கட்சியின் தலைமை கொறடா சுனில் பிரபு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிபதிகள் சூர்யகாந்த், ஜெ.பி. பரிதிவாலா ஆகியோர் கொண்டு விடுமுறை கால அமர்வு, "நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக நாளை நடைபெறவுள்ள மகாராஷ்டிர சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்திற்கு தடை விதிக்க போதுமான காரணங்களை எங்களால் ஏற்க முடியவில்லை.
மகாராஷ்டிர சட்டப்பேரவை சிறப்பு அமர்வு ஜூன் 28ஆம் தேதியிட்ட ஆளுநர் உத்தரவில் உள்ள வழிமுறைகளின்படி நடத்தப்படும்" என்றார்.
இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை ஜூலை 11ஆம் தேதி, துணை சபாநாயகரின் தகுதி நீக்க உத்தரவுக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே தாக்கல் செய்த மனுவுடன் சேர்ந்து விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க: டிடிவி தினகரனோடு உறவு; குடும்பத்தை மட்டும் பார்க்கிறார் ஓபிஎஸ்: பரபரப்பை கிளப்பும் உதயகுமார்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்