அரவிந்த சோனார் என்ற 71 வயது முதியவர் கைகளில் கரண்டியை ஒட்டிக்கொண்டு நிற்கும் வீடியோ ஒன்று இரு தினங்களாக வைரலாகி வருகிறது. கொரோனாவுக்கான இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டப் பிறகு கைகளில் காந்த சக்தி வந்துவிட்டதாகவும், அதனால்தான் கரண்டியெல்லாம் ஒட்டுவதாகவும் அவர் வீடியோ வெளியிட்டார். உடனடியாக நீங்கள் இரும்புமனிதர் என்றும், காந்த மனிதர் என்றும் இணையத்திலும் வைரலானார் அரவிந்த்.  இது குறித்து தெரிவித்த அரவிந்தின் மகன், தடுப்பூசி போட்டால் உடலில் இரும்பு பொருட்கள் ஒட்டும் என சில வீடியோக்களில் பார்த்தேன். அதனால் பெற்றோர்களின் கைகளில் முயற்சி செய்தோம். அதில் அப்பாவின் கைகளில் மட்டும் இப்படி கரண்டி, நாணயம் எல்லாம் ஒட்டியது. அப்பாவுக்கு இதற்கு முன்பு இப்படி இருந்தது இல்லை என தெரிவித்தார். 




இது குறித்து அப்போது தெரிவித்த மருத்துவத்துறையினரும், உடலில் இரும்பு ஒட்டுவது அறிவியல்படி சாத்தியம் இல்லை. இது சாதாரணமானதும் அல்ல. ஏன் உடம்பில் இரும்பு ஒட்டுகிறது என கண்டிப்பாக கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் இதற்கும், கொரோனா தடுப்பூசிக்கும் தொடர்பில்லை. இதுவரை தடுப்பூசி எடுத்துக்கொண்ட யாருக்கும் இது நடக்கவும் இல்லை . முழு ஆய்வுக்கு பின்னர் அவர் உடம்பில் ஏன் இரும்பு  பொருட்கள் ஒட்டியது என தெரியவரும் என தெரிவித்துள்ளனர். 


பெண்கள் செல்போன் பயன்படுத்துவதே கற்பழிப்புக்கு காரணம்; உத்தரபிரதேச அதிகாரி சர்ச்சை கருத்து!


இந்நிலையில் இந்த புகார் குறித்து மத்திய அரசு அதிகாரபூர்வமாக விளக்கம் அளித்துள்ளது. அதில் கொரோனா தடுப்பூசி  எடுத்துக்கொண்டால் உடல் காந்தமாக மாறும் என சோஷியல் மீடியாவில் சில பதிவுகளும், வீடியோக்களும் பரவுகின்றன. உண்மை என்னவென்றால் கொரோனா தடுப்பூசி எந்த விதத்திலும் உடலில் காந்த சக்தியை உண்டாக்காது. கொரோனா தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது. உடனடியாக முன்பதிவு செய்துகொண்டு கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளது.




கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி தான் முதன்மையான தீர்வு தடுப்பூசி மட்டுமே என அரசு தொடர்ந்து வலியுறுத்தி  வருகிறது. தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் அதிகமானோர் (1,01,85,541 ), இதுவரை கொரோனா தடுப்பூச்சியை போட்டுக் கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக் கொள்ள தகுதியானவர்களில், 13.8 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசி டோஸ்களையும், வெறும் 3.6 சதவீதம் பேர் இரண்டாவது தடுப்பூசி டோஸ்களையும் போட்டுக் கொண்டுள்ளனர். 18 முதல் 44 வயதுடைய பயனாளிகளில், 19,50,577 பேருக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது