இளம் பெண்களிடம் செல்போன் கொடுப்பதால் தான் கற்பழிப்புகள் அதிகம் நடைபெறுகின்றது என்று கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார் உத்தரபிரதேச மாநில மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் ஒருவர். இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அவர்களது பெற்றோர் செல்போன் கொடுக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார் அந்த அதிகாரி. மேலும் அவ்வாறு செய்வதே கற்பழிப்புக்கு வழிவகுக்கிறது என்றும். செல்போன் போன்ற சாதனங்களை தங்கள் மகள்களிடமிருந்து விலக்கி வைக்குமாறு பெற்றோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் மீனா குமாரி என்ற அந்த அதிகாரி.


உத்தரபிரதேசத்தில் Mahila Jansunwai (பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தொடர்பான புகார்களின் பொது விசாரணை கூட்டம்) என்ற கூட்டத்தில் பங்கேற்றார் உத்தரபிரதேச மாநில மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் மீனா குமாரி. அப்போது உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் அதிகரித்திருப்பது குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு. பெண்களை அவர்களது பெற்றோர், குறிப்பாக தாய் தான் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். பல பிரச்சனைகள் பெற்றோரின் அஜாக்ரதையால் மட்டுமே நடைபெறுகின்றது என்று கூறியுள்ளார். மேலும் முதலில் இளம் பெண்கள் ஆண்களோடு போனில் பேசுகிறார்கள் அதன் பிறகு அவர்களோடு ஓடி விடுகிறார்கள் என்று கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


‛இதுக்கு மேல பொறுக்க முடியாது குருநாதா...’ டாஸ்மாக் கடை சுவர்களை பஞ்சராக்கி வரும் குடிமகன்கள்!


இந்நிலையில் மீனா குமரியின் கருத்துக்கு மாநில மகளிர் ஆணையம் பொறுப்பேற்காது என்று தற்போது கூறியுள்ளது. அந்த ஆணையத்தின் துணை தலைவர் அஞ்சு சௌத்ரி, மீனா குமாரி கூறிய கருத்துக்கள் முற்றிலும் தவறானது என்றும். செல்போன்களை அவர்களிடம் தராமல் இருப்பது எந்த ஒரு பாலியல் குற்றத்தையும் தடுக்காது என்றும் கூறியுள்ளார். மாறாக செல் போனில் அடையாளம் தெரியாதவர்களிடம் பேசுவதை தவிர்க்கவும் பாதுகாப்பாக செல் போனை பயன்படுத்தவும் பெற்றோர் அறிவுறுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.      
    
மேலும் மீன்குமாரியின் கருத்து குறித்து அவரிடமே கேட்டபோது 'கிராமத்து இளம்பெண்கள் மற்றும் மைனர் பெண்களுக்கு செல்போனை சரியான முறையில் பயன்படுத்த தெரியவில்லை என்றும். அவர்கள் ஆண் நண்பர்களை பெற செல்போனை பயன்படுத்துவதாகவும் பின்னர் அவர்களோடு ஓடி விடுவதாகவும்' அவர் கூறினார். மேலும் தேவையற்ற விஷயங்களை பார்க்க அவர்கள் தங்களது ஸ்மார்ட் போனை பயன்படுத்துவதாக அவர் கூறினார். 


கடந்த ஜனவரி மாதம் தேசிய பெண்கள் ஆணையத்தின் உறுப்பினர் சந்திரமுகி தேவி, அப்போது நடந்த கூட்டுப்பாலியல் வன்முறை குறித்து ஒரு சர்ச்சையான கருத்தை வெளியிட்ட நிலையில், உத்தரபிரதேச பெண்கள் ஆணையம் அவருடைய அந்த கருத்துக்கு பொறுப்பேற்காமல் விலகியது. அதனை தொடர்ந்து சந்திரமுகி தேவி என்ற அந்த அதிகாரி தனது கருத்தை திரும்பப்பெற்றது குறிப்பிடத்தக்கது.